AYAN EDUCATIONA NEWS

Sunday, 22 December 2019

*சேதமான பள்ளி கட்டிடங்களை இடிக்க பள்ளிக்கல்வி துறை உத்தரவு*


🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟
⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡

*💥அரசு பள்ளிகளில் பழைய, சேதமான கட்டிடங்களை இடித்து அகற்றும்படி பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.*

*💥தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில், உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவிட்டுள்ளார்.*

*💥அதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில், தேவையான இடங்களில், புதிய வகுப்பறை கட்டடங்கள் கட்டவும், பழைய கட்டிடங்களை அகற்றவும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.*

*💥முதற்கட்டமாக மாணவர்களுக்கு அச்சுறுத்தலாக, பாதுகாப்பற்ற நிலையில் உள்ள பழைய, சேதமான கட்டடங்களை உடனடியாக இடித்து அகற்றும்படி, முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.*

*💥ஏற்கனவே, பல பள்ளிகளில் பழைய கட்டடங்களை இடிக்க, இரண்டு மாதங்களுக்கு முன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.*

*💥அப்போது விடுபட்ட பள்ளிகளின் கட்டடங்களை, இந்த அரையாண்டு தேர்வு விடுமுறையில், பொதுப்பணித்துறை உதவியுடன் அகற்றும் படி, முதன்மை கல்வி அதிகாரிகள், பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்.*

🗝ayaneducationnews.blogspot.com

*📲TNTP ONLINE TRAINING FOR TEACHERS - EXPLAIN VIDEO*

*📲TNTP ONLINE TRAINING FOR TEACHERS - EXPLAIN VIDEO*

🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟
⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡

*📲TNTP தளத்தில் ஆசிரியர்களுக்கான Course*

*📲2, 3 ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு ஆங்கிலம், கணிதம் பாடம் தொடர்பான வீடியோவும் அதனைச் சார்ந்த Quiz வினாக்களும் கொடுக்கப்பட்டுள்ளது. வீடியோவை பார்த்து விட்டு அந்த வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும். இந்த வீடியோக்களைப் பார்ப்பதால் கற்பித்தலில் பல புதிய ஐடியாக்கள் கிடைக்கும்.*

*TNTP தளத்தில் எப்படி செல்வது என்பது குறித்த வீடியோ*
👇👇👇👇👇👇👇👇
https://youtu.be/xVz3I7iUE2A

🗝ayaneducationnews.blogspot.com

Saturday, 21 December 2019

*கணித மேதை இராமாணுஜம் 132 வது பிறந்தநாள் - தேசிய கணித தினம் டிசம்பர் 22*

*கணித மேதை இராமாணுஜம் 132 வது பிறந்தநாள் - தேசிய கணித தினம் டிசம்பர் 22*

🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟
⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡

*🕑கணக்கு போட்டு வாழ்ந்தால் படிப்பு, வாழ்க்கை சிறக்கும்.*

*🕑கணக்கு - பள்ளி காலங்களில் நம்மை போட்டு பார்க்கும் பாடம் கணக்கை தவிர வேறு என்னவாக இருக்க முடியும்? கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல், அல்ஜீப்ரா என பல போகப்போக தலை சுற்றி விழுபவர்கள் தான் அதிகம். ஆனால் அதே கணிதத்தை ஆர்வமாக பயின்று மேதையாக வாழ்ந்தவர் இராமாணுஜம். அவருக்கு நாளை 132 வது பிறந்தநாள், அவரின் பிறந்தநாளை தேசிய கணித தினமாக கொண்டாடுகிறோம்.*

*🕒அவரைப்பற்றி தெரிந்துகொள்ள கீழே உள்ள link ஐ கிளிக் செய்யவும்.*
👇👇👇👇👇👇👇👇

🗝ayaneducationnews.blogspot.com

*தேசிய கணித தினம் டிசம்பர் 22 ஐ முன்னிட்டு கணித புலிகள் எனும் கணித மன்றம் திறப்பு விழா*

*_தேசிய கணித தினம்-டிச-22_*

🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟
⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡

*கணித புலிகள்-கணித மன்றம் திறப்பு விழா*

*🕐சேலம் மாவட்டம், பெ.நா.பாளையம் ஒன்றியம், மண்ணூர் நடுநிலைப் பள்ளியில் தேசிய கணித தினத்தை முன்னிட்டு கணித புலிகள்-கணித மன்றம்  வெள்ளிக்கிழமை (20.12.2019) அன்று திறப்பு விழா செய்யப்பட்டது. விழாவில் தலைமை ஆசிரியர் திருமிகு.முருகன் மற்றும் பொதுமக்கள் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.*

*🕑அதை தொடர்ந்து சீனிவாச ராமானுஜன் வாழ்க்கை வரலாற்றையும், கணித சாதனைகள் குறித்தும் மாணவர்களுக்கு கூறி, காணொலிகள் காண்பிக்கப்பட்டது.*

*🕒20 வாய்பாடுகளை நேராக, தலைகீழாக மற்றும் இடையிடையே சொல்லிய மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களும், பதக்கங்களும், கேடயமும் கொடுத்து கெளரவிக்கப்பட்டது. பரிசு பெற்ற மாணவர்களை ஊர் பொதுமக்கள் வாய்பாடு கேட்டனர். மாணவர்கள் சொன்ன விதம் பார்த்து மாணவர்களை பாராட்டிச் சென்றனர்.*

*🕓கணித மேதைகள் குறித்த பேச்சு, வர்க்க வாய்பாடு, கணித பாடல்கள் என மாணவர்கள் அசத்திய விதம் ஊர் பொதுமக்களையும், பெற்றோர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.*

*🕔கணித பாடப்பகுதியில் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் உருவாக்கப்பட்ட கணித மன்றத்தினை சிறப்பாக செயல்படுத்த மாணவர்கள் மத்தியில் கூறப்பட்டது.*

💐🌹💐🌹💐🌹💐🌹
*அனைவருக்கும் தேசிய கணித தின நல்வாழ்த்துகள்*
💐🌹💐🌹💐🌹💐🌹

_நன்றியுடன்_

*ப.சக்திவேல் ஆசிரியர்🙏🏻*

_(மறக்காமல் காணொளி பாருங்க)_

*🎥கணித புலிகள் - கணித மன்றம் திறப்பு விழா*
👇👇👇👇👇👇👇👇

https://youtu.be/r0aoR3PPNZY

*🎥கணித மேதை சீனிவாச இராமானுஜன் பற்றிய நான்குவரிச் செய்திகள்*
👇👇👇👇👇👇👇👇

https://youtu.be/scysdx-zUtY

🗝ayaneducationnews.blogspot.com

*உள்ளாட்சித் தேர்தல்கள் மாற்றுத்திறனாளிகள் தேர்தல் பணியிலிருந்து விலக்களித்தல் தொடர்பாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் கடிதம் வெளியீடு*

*உள்ளாட்சித் தேர்தல்கள் மாற்றுத்திறனாளிகள் தேர்தல் பணியிலிருந்து விலக்களித்தல்  தொடர்பாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் கடிதம் வெளியீடு*

🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟
⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡

*💥அனைத்து அரசுப்பணி மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் விருப்பமுள்ள மாற்று திறனாளிகளை மட்டும் தேர்தல் பணியில் ஈடுபடுத்திக்கொள்ளுமாறும், விருப்பமில்லாத மாற்றுத் திறனாளிகளை கட்டாயப்படுத்தவேண்டாம் என்றும் இவ்வாணையத்தை கேட்டுக் கொண்டுள்ளது.*

*💥மாற்றுத் திறனாளிகள் திறன், விருப்பு அடிப்படையில் மட்டுமே தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என தமிழ்நாடு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.*

🗝ayaneducationnews.blogspot.com

*தமிழகத்தில் வரும் 26ம் தேதி நெருப்பு வளைய சூரிய கிரகணம் நிகழ உள்ளது. (வெறும் கண்களால் பார்க்க கூடாது)*

*தமிழகத்தில் வரும் 26ம் தேதி நெருப்பு வளைய  சூரிய கிரகணம் நிகழ உள்ளது. (வெறும் கண்களால் பார்க்க கூடாது)*

🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟
⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡

*🌒🌓🌔சூரியன், சந்திரன், பூமி  மூன்றும் ஒரே நேர்கோட்டில் இருக்கும் போது சூரிய வெளிச்சத்தை சந்திரன் மறைக்கிறது. பூமியிலிருந்து பார்க்கும் போது சந்திரன் சூரியனை மறைக்கும் காட்சி தென்படும்.*

*🌒🌓🌔சூரியனை முழுவதுமாக சந்திரன் மறைத்தால் அதுதான் முழு சூரிய கிரகணம். அவ்வகையில் இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணமாக டிசம்பர் 26 ஆம் தேதியன்று நெருப்பு வளைய சூரிய கிரகணம் என்னும் அரிய சூரிய கிரகண நிகழ்வு தோன்றுகிறது.*

_இது பற்றி முதுநிலை விஞ்ஞானி வெங்கடேஸ்வரன் கூறுகையில்;_

*🌒🌓🌔டிசம்பர் 26 ல் நெருப்பு வளைய சூரிய கிரகணம் காலை 8.00 மணியிலிருந்து 3 மணிநேரம் சூரிய கிரகணம் தெரியும். கோவையில் தெளிவாகவும், சென்னையில் பகுதி அளவிலும் கிரகணம் தெரியும்.*

*🌒🌓🌔அவினாசி, கரூர், ஈரோடு, சிவகங்கை உள்ளிட்ட பத்து இடங்களில் கிரகணம் தெளிவாக தெரியும்.*

_👁சூரிய கிரகணத்தை எப்போதும் வெறும் கண்களால் பார்க்க கூடாது.👁_

*🌒🌓🌔கிரகணத்தின் போது உணவு உட்கொள்ளலாம், உணவு கெட்டுப்போகாது என்று கூறினார்.*

*🌒🌓🌔சூரிய கிரகணத்தை பார்பதற்கு தமிழகம் முழுவதும் தமிழ்நாடு முழுவதும் சிறப்பு ஏற்பாடுகளை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் செய்து வருகிறது.*

*🎥நெருப்பு வளைய  சூரிய கிரகணம் பற்றிய காணொளி செய்தி*
👇👇👇👇👇👇👇👇
https://youtu.be/UCKh2Ook328

🗝ayaneducationnews.blogspot.com

*நோபல் பரிசு குழு உறுப்பினர் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடல்*

*நோபல் பரிசு குழு உறுப்பினர் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடல்*

🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟

⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡

*🎙நோபல் பரிசு குழு உறுப்பினர் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடல், சிங்கப்பூர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் பேச்சு*

*🎙தேவக்கோட்டை சேர்மன் மாணிக்கவாசகன் நடுநிலைப் பள்ளியில் நோபல் பரிசுக்குழு உறுப்பினர் பலாஸ் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடினார்.*

*🎙ஆசிரியர் அறிவுரைப்படி நடந்தால் எந்த உயரத்தையும் தொடலாம் நோபல் பரிசுக்குழு உறுப்பினர் பேச்சு*

🗝ayaneducationnews.blogspot.com