AYAN EDUCATIONA NEWS

AYAN NEWS


Sunday, 22 December 2019

*சேதமான பள்ளி கட்டிடங்களை இடிக்க பள்ளிக்கல்வி துறை உத்தரவு*


🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟
⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡

*💥அரசு பள்ளிகளில் பழைய, சேதமான கட்டிடங்களை இடித்து அகற்றும்படி பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.*

*💥தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில், உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவிட்டுள்ளார்.*

*💥அதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில், தேவையான இடங்களில், புதிய வகுப்பறை கட்டடங்கள் கட்டவும், பழைய கட்டிடங்களை அகற்றவும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.*

*💥முதற்கட்டமாக மாணவர்களுக்கு அச்சுறுத்தலாக, பாதுகாப்பற்ற நிலையில் உள்ள பழைய, சேதமான கட்டடங்களை உடனடியாக இடித்து அகற்றும்படி, முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.*

*💥ஏற்கனவே, பல பள்ளிகளில் பழைய கட்டடங்களை இடிக்க, இரண்டு மாதங்களுக்கு முன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.*

*💥அப்போது விடுபட்ட பள்ளிகளின் கட்டடங்களை, இந்த அரையாண்டு தேர்வு விடுமுறையில், பொதுப்பணித்துறை உதவியுடன் அகற்றும் படி, முதன்மை கல்வி அதிகாரிகள், பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்.*

🗝ayaneducationnews.blogspot.com

No comments:

Post a Comment