AYAN EDUCATIONA NEWS

Showing posts with label ஊதிய செய்தி. Show all posts
Showing posts with label ஊதிய செய்தி. Show all posts

Thursday, 19 December 2019

*8ம் வகுப்பில் NMMS தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு மாதம் 1000 ரூபாய்!*

*8ம் வகுப்பில் NMMS தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு மாதம் 1000 ரூபாய்!*

🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟
⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡

*_தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!_*

*🎯ஒவ்வொரு வருடமும் மத்திய அரசின் தேசிய வருவாய்வழிமற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டத்தின்கீழ் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.*

*🎯இந்த உதவித்தொகை பெறுவதற்கு , என்எம்எம்எஸ் தேர்வு நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 படிப்பு முடியும் வரை மாதந்தோறும் ரூ.500 உதவித்தொகையாக வழங்கப்பட்டு வந்தது.*

*🎯இந்த உதவித் தொகைஇந்த கல்வியாண்டு முதல் 1000 ரூபாயாக உயர்த்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.*

*🎯இந்த ஆண்டுக்கான என்எம்எம்எஸ் தேர்வு கடந்த டிசம்பர் 1-ம் தேதி நடைபெறும் என்றுஅறிவிக்கப்பட்ட நிலையில், கனமழை காரணமாக டிசம்பர் 15-ம் தேதிக்கு தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டன.*

*🎯இத் தேர்வை தமிழகம் முழுவதும் 534 தேர்வு மையங்களில் 1.50 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். காலை 9.30 முதல் 11 மணி வரை மனத்திறன் தேர்வும், 11.30 முதல்மதியம் 1 மணி வரை படிப்பறிவுத் திறன் தேர்வும் நடைபெற்றன.*

*🎯மனத்திறன் தேர்வு மிகவும் கடினமாக இருந்ததாக மாணவர்கள் கூறினார்கள். தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியிடப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.*

🗝ayaneducationnews.blogspot.com

*தமிழ்நாடு அரசு அமைத்துள்ள நீதியரசர்.த.முருகேசன் அவர்களின் தலைமையிலான ஊதியக் குறைதீர்க்கும் குழுவில், தனிநபர் மற்றும் சங்கங்கள் சனவரி 3-ற்குள் மனு அளிக்கலாம்*


*புதிய ஊதிய குறை தீர்க்கும் குழுவின் ஆய்வு வரம்புகள் வெளியீடு.*


http://ayaneducationnews.blogspot.com/2019/12/blog-post_19.html


🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟
⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡


*📺ஒரு நபர் குழு, 2010 - இன் பரிந்துரைகளின் அடிப்படையிலும், அரசாணை ( நிலை ) எண். 71, நிதி ( ஊதிய பிரிவு ) துறை, நாள் 26.02.2011 மற்றும் அரசாணை (நிலை) எண். 242, நிதி (ஊதிய பிரிவு) துறை, நாள் 22. 07.2013 ஆகியவற்றில் ஆணையிடப்பட்ட ஊதியக் கட்டமைப்பில் உள்ள முரண்பாடுகள் தொடர்பாக பணியாளர் சங்கங்கள் / தனிநபர்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களை ஊதிய குறை தீர்க்கும் குழு ஆராய்ந்திடவும்*


*📺அரசாணை (நிலை) எண். 71, நிதி (ஊதிய பிரிவு) துறை, நாள் 26.02.2011, முந்தைய ஊதிய குறை தீர்க்கும் பிரிவின் அறிக்கை மற்றும் பரிந்துரையின் அடிப்படையில் வெளியிடப்பட்ட அரசாணை (நிலை) எண். 242, நிதி (ஊதிய பிரிவு) துறை, நாள் 22. 07.2013 - யை மறு ஆய்வு செய்திடவும்*


*📺ஊதிய குறை தீர்க்கும் குழுவானது இந்நேர்வில் கருதப்படும் மனுக்கள் / முரண்பாடுகளின் மீது தனது குறிப்பிட்ட பரிந்துரையினை அரசிற்கு வழங்கிடவும்*

*📺ஊதிய குறை தீர்க்கும் குழுவானது தனது அறிக்கையினை நான்கு மாத காலங்களுக்குள் அரசிற்கு சமர்ப்பிக்கும்.*


*📺அரசாணை (நிலை) எண். 71, நிதி (ஊதிய பிரிவு) துறை, நாள் 26.02.2011 மற்றும் ஊதிய குறை தீர்க்கும் குழு, 2013 - ன் பரிந்துரையின் அடிப்படையில் வெளியிடப்பட்ட அரசாணை (நிலை) எண். 242, நிதி (ஊதிய பிரிவு) துறை, நாள் 22.07.2013 ஆகிய ஆணைகளில் ஊதிய திருத்தம் செய்யப்பட்டதால் பாதிப்புக்குள்ளான தனிப்பட்ட பணியாளர்கள் / பணியாளர் சங்கங்கள் தங்களது முறையீட்டு மனுவினை 03.01.2020 - க்குள்,*

_தலைவர்,_
ஊதிய குறை தீர்க்கும் குழு,
தரை தளம்,
அரசு தகவல் தொகுப்பு விவர மைய வளாகம்,
காந்தி மண்டபம் சாலை, கோட்டூர்புரம்,
சென்னை - 600025.

*என்ற முகவரிக்கு தங்களது முழு விலாசத்தினை குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.*


*📺03.01.2020 - க்கு பிறகு கிடைக்கப்பெறும் மனுக்கள் பரிசீலிக்கப்படமாட்டாது. நேரடி கேட்பிற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.*


🗝ayaneducationnews.blogspot.com

Wednesday, 18 December 2019

*மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு மதிப்பூதியம் ரூ.16,000/- லிருந்து கூடுதலாக ரூ.2,000/ சேர்த்து ரூ.18,000/ ஏப்ரல் 2019 முதல் நிலுவைத் தொகையுடன் வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் பயிற்சி சார்ந்த விவரங்களை பார்வையிட்டு அறிக்கை அனுப்புதல் சார்ந்து மாநில திட்ட இயக்குநரின் கடிதம்.*

🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟
⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡


*☀️ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வி, மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு பயிற்சி அளித்து வரும் சிறப்பு பயிற்றுநர்கள், இயன்முறை பயிற்சியாளர்கள், தொழில் சார் பயிற்சியாளர்கள் மற்றும் பேச்சுப்பயிற்சியாளர்களுக்கு மாதாந்திர மதிப்பூதியம் ரூ.16,000/- லிருந்து கூடுதலாக ரூ.2,000/ சேர்த்து ரூ.18,000/ ஏப்ரல் 2019 முதல் நிலுவைத் தொகையுடன் வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் சார்ந்து மாநில திட்ட இயக்குநரின் கடிதம்.*

*☀️ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வி திட்டத்தின் கீழ் சிறப்பு பயிற்றுநர்கள், இயன்முறைப் பயிற்சியாளர்கள், தொழில்சார் பயிற்சியாளர்கள் மற்றும் பேச்சுப்பயிற்சியாளர்கள் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்காக பணிபுரிந்து
வருகிறார்கள்.*

*☀️மத்திய மனிதவள மேம்பாட்டுதுறையின் கூட்டறிக்கையின்படி, மேம்பாட்டுபள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செய்தியாளர் அவர்களின் வீட்டுவழி பயிற்சி மற்றும் பள்ளி ஆயத்தப் பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்று வரும் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு முறையாக பயிற்சி வழங்குவதை உறுதி செய்யுமாறு செயற்குழுக் கூட்டத்தில் அறிவுறுத்தியுள்ளார் கள். ஆதலால் அனைத்து நிலை ஆய்வு அலுவலர்கள் வீட்டு வழி பயிற்சி மற்றும் பள்ளி ஆயத்தப் பயிற்சி சமயங்களில் பயிற்சி பெற்று வரும் குழந்தைகளை நேரடியாக பார்வையிட்டு குழந்தைகளுக்கு அளிக்கப்படும் பயிற்சி சார்ந்த விவரங்களை மாதந்தோறும் அறிக்கையாக ஒவ்வொரு மாதமும் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு சமர்ப்பிக்க வேண்டும். முதன்மைக் கல்வி அலுவலர்களும் இதனை உறுதி செய்யும் வகையில் மேற்பார்வை செய்ய வேண்டும். மேலும், முதன்மைக் கல்வி அலுவலர்கள் இவ்வறிக்கையினை தொகுத்து மாநிலத் திட்ட இயக்கத்திற்கு உரிய படிவத்தில் மாதந்தோறும் 5ம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.*