*புதிய ஊதிய குறை தீர்க்கும் குழுவின் ஆய்வு வரம்புகள் வெளியீடு.*
http://ayaneducationnews.blogspot.com/2019/12/blog-post_19.html
🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟
⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡
*📺ஒரு நபர் குழு, 2010 - இன் பரிந்துரைகளின் அடிப்படையிலும், அரசாணை ( நிலை ) எண். 71, நிதி ( ஊதிய பிரிவு ) துறை, நாள் 26.02.2011 மற்றும் அரசாணை (நிலை) எண். 242, நிதி (ஊதிய பிரிவு) துறை, நாள் 22. 07.2013 ஆகியவற்றில் ஆணையிடப்பட்ட ஊதியக் கட்டமைப்பில் உள்ள முரண்பாடுகள் தொடர்பாக பணியாளர் சங்கங்கள் / தனிநபர்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களை ஊதிய குறை தீர்க்கும் குழு ஆராய்ந்திடவும்*
*📺அரசாணை (நிலை) எண். 71, நிதி (ஊதிய பிரிவு) துறை, நாள் 26.02.2011, முந்தைய ஊதிய குறை தீர்க்கும் பிரிவின் அறிக்கை மற்றும் பரிந்துரையின் அடிப்படையில் வெளியிடப்பட்ட அரசாணை (நிலை) எண். 242, நிதி (ஊதிய பிரிவு) துறை, நாள் 22. 07.2013 - யை மறு ஆய்வு செய்திடவும்*
*📺ஊதிய குறை தீர்க்கும் குழுவானது இந்நேர்வில் கருதப்படும் மனுக்கள் / முரண்பாடுகளின் மீது தனது குறிப்பிட்ட பரிந்துரையினை அரசிற்கு வழங்கிடவும்*
*📺ஊதிய குறை தீர்க்கும் குழுவானது தனது அறிக்கையினை நான்கு மாத காலங்களுக்குள் அரசிற்கு சமர்ப்பிக்கும்.*
*📺அரசாணை (நிலை) எண். 71, நிதி (ஊதிய பிரிவு) துறை, நாள் 26.02.2011 மற்றும் ஊதிய குறை தீர்க்கும் குழு, 2013 - ன் பரிந்துரையின் அடிப்படையில் வெளியிடப்பட்ட அரசாணை (நிலை) எண். 242, நிதி (ஊதிய பிரிவு) துறை, நாள் 22.07.2013 ஆகிய ஆணைகளில் ஊதிய திருத்தம் செய்யப்பட்டதால் பாதிப்புக்குள்ளான தனிப்பட்ட பணியாளர்கள் / பணியாளர் சங்கங்கள் தங்களது முறையீட்டு மனுவினை 03.01.2020 - க்குள்,*
_தலைவர்,_
ஊதிய குறை தீர்க்கும் குழு,
தரை தளம்,
அரசு தகவல் தொகுப்பு விவர மைய வளாகம்,
காந்தி மண்டபம் சாலை, கோட்டூர்புரம்,
சென்னை - 600025.
*என்ற முகவரிக்கு தங்களது முழு விலாசத்தினை குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.*
*📺03.01.2020 - க்கு பிறகு கிடைக்கப்பெறும் மனுக்கள் பரிசீலிக்கப்படமாட்டாது. நேரடி கேட்பிற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.*
No comments:
Post a Comment