🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟
⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡
*☀️ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வி, மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு பயிற்சி அளித்து வரும் சிறப்பு பயிற்றுநர்கள், இயன்முறை பயிற்சியாளர்கள், தொழில் சார் பயிற்சியாளர்கள் மற்றும் பேச்சுப்பயிற்சியாளர்களுக்கு மாதாந்திர மதிப்பூதியம் ரூ.16,000/- லிருந்து கூடுதலாக ரூ.2,000/ சேர்த்து ரூ.18,000/ ஏப்ரல் 2019 முதல் நிலுவைத் தொகையுடன் வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் சார்ந்து மாநில திட்ட இயக்குநரின் கடிதம்.*
*☀️ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வி திட்டத்தின் கீழ் சிறப்பு பயிற்றுநர்கள், இயன்முறைப் பயிற்சியாளர்கள், தொழில்சார் பயிற்சியாளர்கள் மற்றும் பேச்சுப்பயிற்சியாளர்கள் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்காக பணிபுரிந்து
வருகிறார்கள்.*
*☀️மத்திய மனிதவள மேம்பாட்டுதுறையின் கூட்டறிக்கையின்படி, மேம்பாட்டுபள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செய்தியாளர் அவர்களின் வீட்டுவழி பயிற்சி மற்றும் பள்ளி ஆயத்தப் பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்று வரும் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு முறையாக பயிற்சி வழங்குவதை உறுதி செய்யுமாறு செயற்குழுக் கூட்டத்தில் அறிவுறுத்தியுள்ளார் கள். ஆதலால் அனைத்து நிலை ஆய்வு அலுவலர்கள் வீட்டு வழி பயிற்சி மற்றும் பள்ளி ஆயத்தப் பயிற்சி சமயங்களில் பயிற்சி பெற்று வரும் குழந்தைகளை நேரடியாக பார்வையிட்டு குழந்தைகளுக்கு அளிக்கப்படும் பயிற்சி சார்ந்த விவரங்களை மாதந்தோறும் அறிக்கையாக ஒவ்வொரு மாதமும் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு சமர்ப்பிக்க வேண்டும். முதன்மைக் கல்வி அலுவலர்களும் இதனை உறுதி செய்யும் வகையில் மேற்பார்வை செய்ய வேண்டும். மேலும், முதன்மைக் கல்வி அலுவலர்கள் இவ்வறிக்கையினை தொகுத்து மாநிலத் திட்ட இயக்கத்திற்கு உரிய படிவத்தில் மாதந்தோறும் 5ம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.*
No comments:
Post a Comment