*தமிழகத்தில் வரும் 26ம் தேதி நெருப்பு வளைய சூரிய கிரகணம் நிகழ உள்ளது. (வெறும் கண்களால் பார்க்க கூடாது)*
🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟
⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡
*🌒🌓🌔சூரியன், சந்திரன், பூமி மூன்றும் ஒரே நேர்கோட்டில் இருக்கும் போது சூரிய வெளிச்சத்தை சந்திரன் மறைக்கிறது. பூமியிலிருந்து பார்க்கும் போது சந்திரன் சூரியனை மறைக்கும் காட்சி தென்படும்.*
*🌒🌓🌔சூரியனை முழுவதுமாக சந்திரன் மறைத்தால் அதுதான் முழு சூரிய கிரகணம். அவ்வகையில் இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணமாக டிசம்பர் 26 ஆம் தேதியன்று நெருப்பு வளைய சூரிய கிரகணம் என்னும் அரிய சூரிய கிரகண நிகழ்வு தோன்றுகிறது.*
_இது பற்றி முதுநிலை விஞ்ஞானி வெங்கடேஸ்வரன் கூறுகையில்;_
*🌒🌓🌔டிசம்பர் 26 ல் நெருப்பு வளைய சூரிய கிரகணம் காலை 8.00 மணியிலிருந்து 3 மணிநேரம் சூரிய கிரகணம் தெரியும். கோவையில் தெளிவாகவும், சென்னையில் பகுதி அளவிலும் கிரகணம் தெரியும்.*
*🌒🌓🌔அவினாசி, கரூர், ஈரோடு, சிவகங்கை உள்ளிட்ட பத்து இடங்களில் கிரகணம் தெளிவாக தெரியும்.*
_👁சூரிய கிரகணத்தை எப்போதும் வெறும் கண்களால் பார்க்க கூடாது.👁_
*🌒🌓🌔கிரகணத்தின் போது உணவு உட்கொள்ளலாம், உணவு கெட்டுப்போகாது என்று கூறினார்.*
*🌒🌓🌔சூரிய கிரகணத்தை பார்பதற்கு தமிழகம் முழுவதும் தமிழ்நாடு முழுவதும் சிறப்பு ஏற்பாடுகளை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் செய்து வருகிறது.*
*🎥நெருப்பு வளைய சூரிய கிரகணம் பற்றிய காணொளி செய்தி*
👇👇👇👇👇👇👇👇
https://youtu.be/UCKh2Ook328
No comments:
Post a Comment