*_தேசிய கணித தினம்-டிச-22_*
🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟
⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡
*கணித புலிகள்-கணித மன்றம் திறப்பு விழா*
*🕐சேலம் மாவட்டம், பெ.நா.பாளையம் ஒன்றியம், மண்ணூர் நடுநிலைப் பள்ளியில் தேசிய கணித தினத்தை முன்னிட்டு கணித புலிகள்-கணித மன்றம் வெள்ளிக்கிழமை (20.12.2019) அன்று திறப்பு விழா செய்யப்பட்டது. விழாவில் தலைமை ஆசிரியர் திருமிகு.முருகன் மற்றும் பொதுமக்கள் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.*
*🕑அதை தொடர்ந்து சீனிவாச ராமானுஜன் வாழ்க்கை வரலாற்றையும், கணித சாதனைகள் குறித்தும் மாணவர்களுக்கு கூறி, காணொலிகள் காண்பிக்கப்பட்டது.*
*🕒20 வாய்பாடுகளை நேராக, தலைகீழாக மற்றும் இடையிடையே சொல்லிய மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களும், பதக்கங்களும், கேடயமும் கொடுத்து கெளரவிக்கப்பட்டது. பரிசு பெற்ற மாணவர்களை ஊர் பொதுமக்கள் வாய்பாடு கேட்டனர். மாணவர்கள் சொன்ன விதம் பார்த்து மாணவர்களை பாராட்டிச் சென்றனர்.*
*🕓கணித மேதைகள் குறித்த பேச்சு, வர்க்க வாய்பாடு, கணித பாடல்கள் என மாணவர்கள் அசத்திய விதம் ஊர் பொதுமக்களையும், பெற்றோர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.*
*🕔கணித பாடப்பகுதியில் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் உருவாக்கப்பட்ட கணித மன்றத்தினை சிறப்பாக செயல்படுத்த மாணவர்கள் மத்தியில் கூறப்பட்டது.*
💐🌹💐🌹💐🌹💐🌹
*அனைவருக்கும் தேசிய கணித தின நல்வாழ்த்துகள்*
💐🌹💐🌹💐🌹💐🌹
_நன்றியுடன்_
*ப.சக்திவேல் ஆசிரியர்🙏🏻*
_(மறக்காமல் காணொளி பாருங்க)_
*🎥கணித புலிகள் - கணித மன்றம் திறப்பு விழா*
👇👇👇👇👇👇👇👇
*🎥கணித மேதை சீனிவாச இராமானுஜன் பற்றிய நான்குவரிச் செய்திகள்*
👇👇👇👇👇👇👇👇
No comments:
Post a Comment