Monday, 5 May 2025
12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
Monday, 30 May 2022
Wednesday, 25 May 2022
🧏TPF/GPF Account Slip (கணக்கீட்டுத்தாள்) பதிவிறக்கம் செய்வது எப்படி?
Tuesday, 7 September 2021
*🛡️சட்டசபையில் 110வது விதியின் கீழ் மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட அறிவிப்புகள்:*
*🛡️சட்டசபையில் 110வது விதியின் கீழ் மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட அறிவிப்புகள்:*
*🛡️அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு 2022 ஜன., முதல் DA உயர்த்தப்படும். இதனால்,16 லட்சம் பேர் பயன்பெறுவார்கள். அரசுக்கு 6480 கோடி ரூபாய் கூடுதல் செலவு*
*🛡️அரசு பணியாளர்களுக்கான காப்பீடு திட்டத்தில் மகன், மகள் ஆகியோர் சேர்க்கப்படுவார்கள்*
*🛡️ஓய்வு பெறும் நாளில் தற்காலிக பணியில் அமர்த்தப்படும் முறை ஒழிக்கப்படும்.*
*🛡️அரசு ஊழியர்களுக்கு கூடுதல் கல்வி தகுதிக்கான ஊக்கத்தொகை விரைவில் அறிவிக்கப்படும்*
*🛡️சத்துணவு ஊழியர்கள் ஓய்வு வயது 60 ஆக அதிகரிக்கப்படும்.*
*🛡️மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் கோவிட் 19 தொற்றுக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை.*
*🛡️அரசு அலுவலகம் /பள்ளியில் இளநிலை உதவியாளர் காலி பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.*
*🛡️அரசு பள்ளிகளில் மாணவர்களின் விகிதாச்சார எண்ணிக்கை அடிப்படையில் ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்படுவார்கள்.*
*🛡️கடந்த ஆட்சியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட காலம் பணி நாட்களாக கருதப்படும். பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் அதே இடத்தில் பணியில் அமர்த்தப்படுவார்கள். போராட்ட காலத்தில் அரசு ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்படும்.*
*🛡️2017,18,19 ஆம் ஆண்டுகளில் வேலைநிறுத்தம் மற்றும் தற்காலிக பணிநீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தப்படும். ஒழுங்கு நடவடிக்கை காரணமாக பதவி உயர்வு பாதிக்கப்பட்டு இருந்தால் அது சரி செய்யப்படும்*
*🛡️அரசு ஊழியர்களுக்கு உதவி பெறும் வகையில் ஒருங்கிணைந்த தனி தொலைபேசி உதவி மையம் அமைக்கப்படும்*
*🛡️புதிதாக அரசுப் பணியில் சேரும் பணியாளர்கள் மற்றும் பதவி உயர்வு பெறும் பணியாளர்களுக்கு பணி தொடர்பான பயிற்சி அந்தந்த மாவட்ட வாரியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்*
*✍️அரசு ஊழியர்களின் நலனில் எப்பொழுதும் அக்கறை கொண்டு அவர்களது நியாயமான கோரிக்கைகளை இந்த அரசு படிப்படியாக நிறைவேற்றும்*
Saturday, 28 August 2021
*✍️பள்ளிகள் திறப்பு - தலைமையாசிரியர்களுக்கான சுற்றறிக்கை - பள்ளிக்கல்வித்துறை வெளியீடு:*
*🤝பள்ளிக் கல்வித் துறை பள்ளிக் கல்விமுதன்மைக் செயலாளர் மற்றும் ஆணையர் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற கூட்டம் :*
*📢01.09.2021 முதல் அனைத்துவகைப் பள்ளியைதிறப்பது தொடர்பாக அனைத்துவகைப் பள்ளி தலைமையாசிரியர்கள் / முதல்வர்களுக்கு சுற்றறிக்கை*
*📆வாரத்தில் 6 நாட்கள் பள்ளி வேலைநாட்கள்*
*👨🏫10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கு தினமும் வகுப்புகள் நடைபெறும்.*
*😇ஒவ்வொரு வகுப்பறையிலும் 20 மாணாக்கர்கள் மட்டுமேசமூக இடைவெளி பின்பற்றி அமரவைக்க வேண்டும்.*
*😇போதிய இடவசதிஇல்லை எனில் , 9 ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப் பெறவேண்டும்.*
*😇உயர்நிலைப்பள்ளிகளில் 9 - ம் வகுப்பு மற்றும் 10 - ம் வகுப்பு தினமும் செயல்படவேண்டும் , போதிய இடவசதி இல்லாத பள்ளிகளில் மட்டும் 9 - ம் வகுப்பு சுழட்சி முறையில் செயல்படவேண்டும்.*
*📡தனியார் பள்ளிகளில் மட்டும் , பள்ளிக்கு வருகை புரிய இயலாத மாணவர்களுக்கு தொடர்ந்து இணையவழி ( Online Class ) வகுப்புகள் நடத்தப்படவேண்டும்.*
*😷மாணவர்கள் கட்டாயமாக முகக்கவசம் ( Mask ) அணியவேண்டும்.*
*👋மாணவர்கள் வகுப்பறைக்கு செல்லும் முன் கட்டாயமாக கிருமிநாசினி ( Sanitizer ) சோப்புகளைக் கொண்டு கைகளை சுத்தம் செய்யவேண்டும்.*
*🧍♀️ 🧍♂️பள்ளிவளாகத்தில் அனைவரும் SOP தவறாது பின்பற்ற வேண்டும்.*
*💉அனைத்து ஆசிரியரல்லாத பணியாளர்கள் கட்டாயமாக கோவிட் -19 தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.*
*🤷♂️பள்ளிக்கு வருகை புரிவதிலிருந்து விலக்கு பெற்ற ஆசிரியர்கள் 01.09.2021 முதல் பள்ளிக்கு தவறாது வருகைபுரிய வேண்டும்.*
*💉கோவிட் -19 தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் கட்டாயமாக சார்ந்த பள்ளித் தலைமையாசிரியரிடம் சமர்ப்பிக்கவேண்டும்.*
*💉கோவிட் -19 கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுவர்கள் 90 நாட்கள் கழித்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.*
*📢கோவிட் -19 தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத ஆசிரியர்கள் , அதற்கான விலக்குகோரும் சான்றினை மாவட்டசுகாதாரத் துறை இணை இயக்குநரிடம் பெற்றுசமர்ப்பிக்க வேண்டும்.*
*🤷♂️100 நாள்வேலைவாய்ப்புத்திட்டப் பணியாளர்களைக் கொண்டு பள்ளிவளாகம் மற்றும் வகுப்பறைகள் சுத்தப்படுத்த வேண்டும்.*
*📲EMIS இணையதளத்தில் ஆசிரியர்களின் வருகைப் பதிவு கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.*
*✍️மருத்துவ உதவிமைய எண் மற்றும் அருகிலுள்ள ஆரம்பசுகாதார நிலைய அலைபேசி எண் ( Help Line ) உள்ளிட்டவிவரங்கள் தகவல்பலகையில் மாணவர்கள் / ஆசிரியர்கள் / அலுவலகப் பணியாளர்கள் அனைவரும் தெளிவாக பார்வையிடும் வகையில் இருத்தல் வேண்டும் .*
*📲EMIS விவரங்களை நாள்தோறும் உடனுக்குடன் புதுப்பித்தல் வேண்டும்.*
*🌡️மாணவர்களுக்கு நாள்தோறும் உடல் வெப்பநிலை கண்காணித்து உரிய பதிவேட்டில் பராமரித்தல் வேண்டும்.*
*📲EMIS இணையதளத்தில் தடுப்பூசி செலுத்தியவர்களின் விவரங்கள் தவறாது பதிவேற்றம் செய்திருத்தல் வேண்டும்.*
*📢சமூக இடைவெளியை தவறாது கடைபிக்க வேண்டும்.*
*❌P.E.T. , N.S.S. , N.C.C. , தொடர்பான செயல்பாடுகள் பள்ளிவளாகத்தில் செயல்படுதல் கூடாது.*
*🧍♀️ 🧍♂️மாணவர்களுக்கான சமூக இடைவெளியினை கடைபிடித்து வகுப்பறையில் அமரவைக்க வேண்டும்.*
*🩺தேவைப்படின் RBSK தொடர்புகொண்டு சிறப்பு முகாம் நடத்தி மாணவர்களின் உடல்நிலை | ஆரோக்கியத்தை பரிசோதிக்க வேண்டும்.*
*🛡️மாணவர்களுக்கு தொற்று ஏற்படாதவண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.*
*🏩மாணவர்கள் தங்கும் விடுதிகளில் சமூக இடைவெளி , SOP நடைமுறைகளை பின்பற்றப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.*
*🚌மாணவர்களுக்கான இலவச பேருந்துபயண அட்டை பெற்று வழங்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.*
*💊சத்துமாத்திரைகள் மாணவர்களுக்கு வழங்கப்படும் .*
*📌45 நாட்களுக்கு மாணவர்களுக்கான Bridge Course கற்றல் கற்பித்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.*
*📌கொரோனாபாதிப்புஏற்பட்டநாளிலிருந்து 90 நாட்களுக்குப் பிறகேதடுப்பூசிசெலுத்துவதை உறுதிசெய்யவேண்டும்.*
*📌அவ்வபோது பள்ளிகளை ஆய்வு செய்ய உயர் அலுவலர்கள்வருகைதரஉள்ளதால் , மேற்காணும் அனைத்துதொடர்நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அனைத்துவகைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் / முதல்வர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.*
Saturday, 7 August 2021
Whatsapp இன் மூலம் நீங்கள் Covid -19 தடுப்பூசி செலுத்தியதிற்கான சான்றிதழை pdf வடிவில் பெற்றுக்கொள்ள
Thursday, 8 July 2021
✍️தமிழ் அறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் 15-ந் தேதி கடைசிநாள்
💐தமிழக அரசுக்கும், பள்ளிக் கல்வித்துறைக்கும், SCERT க்கும் ஒரு வாழ்த்து சொல்லுங்க!
*48000 ரூபாய் தர அரசு ரெடி .…! நீங்க ரெடியா ? கடைசி தேதி செப் 26*
*✍️48000 ரூபாய் தர அரசு ரெடி .…! நீங்க ரெடியா ? கடைசி தேதி செப் 26*
✍️அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு என்.எம்.எம்.எஸ் தேர்வை நடத்துகிறது . இதில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு மாதம் 1000 வீதம் ஆண்டுக்கு 12000 என 9, 10, 11, 12 ஆம் வகுப்பு வரை 4 ஆண்டுகள் மொத்தம் 48000 ரூபாய் அரசு நம் வங்கி கணக்கில் பணம் அனுப்பி தரும் . கொஞ்சம் சிரமம் எடுத்து இந்த ஒரு தேர்வை எழுதினால் அந்த பணம் பேருதவியாக இருக்கும்
✍️தேர்வு எழுத விண்ணப்பிக்கும் கடைசி தேதி 26-09-2021
தேர்வு நடைபெறும் தேதி : 04-11-2021
📲வலைத்தளம் www.bse.ap.gov.in
📞முழு விவரங்களுக்கு
செல்: 8332977207, 8332977607
🧑🏫உங்களுக்குத் தெரிந்த 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தச் செய்தியை தெரிவியுங்கள் . ஏழை மாணவர்களுக்கு உதவ உங்கள் பங்கைச் செய்யுங்கள்....
Tuesday, 22 June 2021
*//EMIS IMPORTANT NEWS//*
Tuesday, 8 June 2021
*🗣️14.06.2021 முதல் பள்ளி _தலைமை ஆசிரியர்கள்_ மற்றும் _அலுவலக பணியாளர்கள்_ தினசரி வருகை புரிய வேண்டும் - பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு*
*🗣️14.06.2021 முதல் பள்ளி _தலைமை ஆசிரியர்கள்_ மற்றும் _அலுவலக பணியாளர்கள்_ தினசரி வருகை புரிய வேண்டும் - பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு*
*✍️பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள், சென்னை-6 ந.க.எண். 34462/பிடி1/இ1/2020, நாள்.08.06.2021*
*✍️அரசாணை எண்.613, வருவாய் மேலாண்மைத் துறை நாள்:05.06.2021- ன் படி, நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று காரணமாக மாணவர் நலன் கருதி இந்த ஆண்டு பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வு நடத்தப்படமாட்டாது என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்குவது, உயர்கல்வி பயிலுவதற்கான சான்றிதழ்கள் வழங்குவது சார்ந்த பணிகள் நடைபெற உள்ளதாலும் மாணவர்கள் சேர்க்கை ஆரம்பிக்கப்பட உள்ளதாலும் மற்றும் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய விலையில்லா பாட புத்தகங்கள் மற்றும் கற்றல் கற்பித்தலுக்கு தேவையான இதர நலத்திட்டங்கள் வழங்க வேண்டி உள்ளதாலும், பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளை சுத்தம் செய்வது சார்ந்தும் மற்றும் மாணவர்கள் கல்வி தொலைக்காட்சி கற்றல் சார்ந்த நிகழ்ச்சிகளை பார்வையிட செய்வது சார்ந்தும், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் (தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை) பணிபுரியும் _தலைமையாசிரியர்கள்_ மற்றும் _அலுவலகப் பணியாளர்கள்_ அனைவரும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை (SOP) பின்பற்றி 14.06.2021 முதல் பணிக்கு வருகை புரிய வேண்டுமென பள்ளிக்கல்வி ஆணையர் அவர்களால் அறிவுறுத்தப்படுகிறது.*
Monday, 17 May 2021
*_🚘தமிழகம் முழுவதும் இன்று (17.05.2021) முதல் மாவட்டத்திற்குள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையே பயணம் செய்ய இ-பதிவு கட்டாயம்:_*
*_🚘தமிழகம் முழுவதும் இன்று (17.05.2021) முதல் மாவட்டத்திற்குள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையே பயணம் செய்ய இ-பதிவு கட்டாயம்:_*
*🚙இ- பதிவு முறை, 'சாப்ட்வேர்' மூலம் இயங்குவதால், விபரங்களை பதிவு செய்தவுடன், உடனுக்குடன் ரசீது வரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.*
*🚘இதனால் நெருங்கிய உறவினர்களின் இறப்பு போன்ற, அவசர தேவைக்காக பயணிப்போர், உடனுக்குடன் விண்ணப்பித்து பதிவு பெறலாம்.*
_பதிவு செய்வது எப்படி?_
*🚗இ - பதிவு முறைக்காக உருவாக்கப்பட்டுள்ள, eregister.tnega.org என்ற இணையதளத்தில் மொபைல் எண்ணை பதிவு செய்து, மொபைல் போன் எண்ணுக்கு வரும், 'ஓ.டி.பி.,'யை பதிவு செய்ய வேண்டும்.*
*🚙பின்னர் வரும் விண்ணப்பத்தில் பயண விபரங்கள், அடையாள அட்டை (ஆதார், ஓட்டுனர் உரிமம்) ஏதாவது ஒன்று, மற்றும் பயணத்திற்கான ஆவணங்கள், வாகனத்தின் எண் போன்றவற்றை, பதிவு செய்ய வேண்டும்.*
*🚘அனைத்து விபரங்களையும் பதிவு செய்தவுடன், அளித்த தகவல்கள் சரிபார்க்கப்பட்டு, உடனுக்குடன் ரசீது வழங்கப்படும்.*
*🚗ரசீதில், வாகனத்தின் எண், பயணி பெயர், பயணத்திற்கான காரணம், இடம் உள்ளிட்ட தகவல் இருக்கும்.*
*🚙இதை பி.டி.எப்., வடிவில் பதிவிறக்கம் செய்து கொண்டு, பயணம் மேற்கொள்ளும்போது போலீசாரிடம் காண்பிக்க வேண்டும்.*
_புகைப்படம்:_
நன்றி THE HINDU BUSINESS
Friday, 15 January 2021
*🙋♂️அரசு ஊழியர்கள் துறைத்தேர்வு எழுத ஆதார் கட்டாயம் TNPSC தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அறிவிப்பு*
*🙋♂️அரசு ஊழியர்கள் துறைத்தேர்வு எழுத ஆதார் கட்டாயம் TNPSC தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அறிவிப்பு*
*⚡அரசு ஊழியர்கள் துறைத்தேர்வுக்கு ஆதார் கட்டாயம்*
_டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் (பொறுப்பு) கே. நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:_
*⚡2020 டிசம்பர் பருவத்துக்குரிய துறைத் தேர்வுகள் பிப்ரவரி 14 முதல் 21-ம் தேதி வரை (சனி, ஞாயிறு உட்பட) நடைபெற உள்ளன.*
*⚡விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வாயிலாக ஜனவரி 29-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.*
*⚡விதிமுறைகள், பாடத்திட்டம், தேர்வு அமைப்பு முறை, தேர்வு மையம், தேர்வு கட்டணம், கால அட்டவணை உள்ளிட்ட விவரங்களை தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) காணலாம்.*
*⚡இந்தத்துறைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது ஆதார் எண்ணை கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.*
Thursday, 14 January 2021
*🙋♂️NMMS குறித்து அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அரசு தேர்வுத்துறையின் முக்கிய வழிகாட்டுதல்கள்*
*🙋♂️NMMS குறித்து அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அரசு தேர்வுத்துறையின் முக்கிய வழிகாட்டுதல்கள்*
*⚡NMMS - தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவித் தொகைத் தேர்வு முன்னிட்டு, அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு,*
_அரசுத் தேர்வுத் துறை முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது._
*⚡அதன்படி, 2021-ம் ஆண்டு பிப்ரவரி 21 -ல் நடைபெறவுள்ள தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் எட்டாம் வகுப்புப் பயிலும் பள்ளி மாணவர்கள் இணையதளம் மூலமாக விண்ணப்பப் படிவங்களை*
_28.12.2020 முதல் 08.01.2021 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்._
*⚡மேற்குறிப்பிட்ட தேர்விற்கு விண்ணப்பித்த எட்டாம் வகுப்பு பள்ளி மாணவர்களின் விவரங்களைச் சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர்கள்*
_www.dge.tn.gov.in என்னும் இணையதளம் மூலமாக_
*⚡05.01.2021 முதல் 12.01.2021 வரை பதிவு செய்யலாம் என்ற விவரத்தினை தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.*
*⚡1) கடந்த ஆண்டைப் போலவே இந்த வருடமும் EMIS அடிப்படையில் மாணவர்களின் பதிவு நடைபெறவுள்ளது. எனவே, பள்ளிகளுக்கான USER ID, PASSWORD- ஐப் பயன்படுத்தி மாணவர்களின் EMIS எண்ணினைப் பதிவு செய்தவுடன் பெரும்பாலான விவரங்கள் உடனடியாகத் திரையில் தோன்றும். அதில் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின், திருத்தங்களை மேற்கொள்ளவும், விடுபட்டுள்ள விவரங்களையும், புகைப்படத்தையும் பதிவேற்றம் செய்தால் போதுமானதாகும்.*
*⚡புதியதாக பள்ளிகள் இணைப்பில் குறிப்பிட்டுள்ள நடைமுறைகளின்படி பதிவு செய்தபின் புதிய USER ID, PASSWORD- ஐப் பயன்படுத்தி மாணவர்களின் விவரங்களைப் பதிவேற்றம் செய்துகொள்ளலாம்.*
_பதிவேற்றம் செய்யும் போது நினைவில் கொள்ள வேண்டிய விவரங்கள்:_
*⚡2) தேர்வர்கள் விண்ணப்பத்தில் பூர்த்தி செய்துள்ள விவரங்கள் சரிதானா என்பதனைப் பள்ளி ஆவணங்களை ஒப்பிட்டுச் சரிபார்த்த பின்னர் பதிவேற்றம் செய்ய வேண்டும்.*
*⚡3) மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையை மாணவர்களிடமிருந்து பெற்று இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.*
*⚡4) பள்ளி முகவரி என்ற இடத்தில் பள்ளியின் பெயர், முகவரியினை அஞ்சல் குறியீட்டுடன் பதிவு செய்யப்படவேண்டும்.*
*⚡5) வீட்டு முகவரி என்ற இடத்தில் பள்ளியின் பெயர் மற்றும் முகவரியினைப் பதியக்கூடாது. தேர்வரின் வீட்டு முகவரி மட்டுமே பதியப்படவேண்டும்.*
*⚡6) பெற்றோரின் தொலைபேசி/ கைபேசி என்ற இடத்திலும் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் தொலைபேசி/கைபேசி எண்ணையே பதிய வேண்டும். பள்ளியின் தொலைபேசி என்ற இடத்தில் மட்டும் பள்ளியின் தொலைபேசி எண்ணினைப் பதிந்தால் போதுமானது.*
*⚡7) பதிவு செய்த விவரங்களை Declaration form Print out கொண்டு சரியான முறையில் பதிவு செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ளவும்.*
*⚡8) 05.01.2021 பிற்பகல் முதல் 12.01.2021 வரை பதிவேற்றம் செய்த விவரங்களில் மாற்றம் ஏதேனும் இருப்பின் 12.01.2021 –க்குள் சரி செய்து கொள்ளலாம். அதன்பின் கண்டிப்பாக மாற்ற இயலாது.*
*⚡பதிவேற்றம் முடிந்தவுடன் Summary Report மற்றும் தேர்வர்களின் விவரத்தினை (ஒரு தேர்வருக்கு ரூ.50/- வீதம்) சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர்களிடம் 20.01.2021-க்குள் ஒப்படைக்குமாறு அனைத்துப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கும் அறிவுரை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.*
*⚡மாவட்டக் கல்வி அலுவலர்கள் பள்ளிகளிடமிருந்து பெறும் தொகையை ரொக்கமாகச் சம்பந்தப்பட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் 25.01.2021 அன்று சமர்ப்பிக்க வேண்டும். மாவட்டக் கல்வி அலுவலரிடமிருந்து விண்ணப்பித்த அனைத்துத் தேர்வர்களின் தேர்வுக் கட்டணத் தொகை பெறப்பட்டுள்ளதா என்பதை உதவி இயக்குநர்கள் உறுதிசெய்து சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.*
_விண்ணப்பம் பதிவேற்றம் செய்யும் காலம்: 05.01.2021 - 12.01.2021._
_விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்ய கடைசி நாள் : 12.01.2021._
_Summary Report_
*⚡தொகையை மாவட்டக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டிய நாள்: 13.01.2021 - 20.01.2021.*
*⚡மாவட்டக் கல்வி அலுவலர்கள் ரொக்க தொகையை உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டிய நாள். 25.01 -2021.*
Monday, 11 January 2021
*🙋♂️தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி முதல்.. 10 ம் வகுப்பு மற்றும் 12 ம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு மட்டும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வகுப்புகள் செயல்படும்-தமிழக முதலமைச்சர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.*
*🙋♂️தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி முதல்.. 10 ம் வகுப்பு மற்றும் 12 ம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு மட்டும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வகுப்புகள் செயல்படும்-தமிழக முதலமைச்சர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.*
*⚡19 ம் தேதி தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும்*
*⚡பொதுத்தேர்வு நடைபெறும் 10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வரும் 19 ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும்.*
*⚡வகுப்புக்கு 25 மாணவர்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்- தமிழக அரசு*
Sunday, 10 January 2021
*🏆சிவகாமி கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை சார்பாக "BEST AWARD -2021" விருது வழங்கும் விழா - செய்தி துளிகள்*
*🏆சிவகாமி கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை சார்பாக "BEST AWARD -2021" விருது வழங்கும் விழா - செய்தி துளிகள்*
*🏆கள்ளக்குறிச்சி மாவட்டம் சிவகாமி கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை சார்பாக "BEST AWARD -2021" விருது வழங்கும் விழா (10.01.2021) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் ஏ.கே.டி கல்வி நிறுவன ஆடிடோரியத்தில் நடைபெற்றது.*
*🏆தமிழகத்தில் பல மாவட்டங்களிலிருந்து சிறந்த ஆசிரியர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், கலைஞர்கள் மற்றும் மாணவச் செல்வங்கள் என மொத்தம் 100 க்கும் மேற்பட்டவர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு விருது வழங்கப்பட்டது.*
*🏆சிவகாமி அறக்கட்டளை நிறுவனத் தலைவர் _திரு.ஆ.கோபி_ அவர்கள் விழாவினை சிறப்பாக ஏற்பாடு செய்து வரவேற்புரை நிகழ்த்தினார்.*
*🏆கள்ளக்குறிச்சி மாவட்டக் கல்வி அலுவலர் _திருமதி.கா.கார்த்திகா_ அவர்கள் தலைமை ஏற்று சிறப்புரை நிகழ்த்தி விருதுகளை வழங்கினார்.*
*🏆சங்கராபுரம் வட்டாட்சியர் _திரு.ப.நடராஜன்_ அவர்களும், சங்கராபுரம் உதவி காவல் ஆய்வாளர் _திரு.ஆர்.திருமால்_ அவர்களும் முன்னிலை வகித்து சிறப்புரை நிகழ்த்தி விருதுகளை வழங்கினார்கள்.*
*🏆தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக இலக்கியத்துறை துறைத்தலைவர் _பேராசிரியர்.பெ.இளையாப்பிள்ளை_ அவர்கள் விழாவினை துவக்கி வைத்து சிறப்புரை நிகழ்த்தி விருதுகளை வழங்கினார்.*
*🏆கள்ளக்குறிச்சி மேனாள் மா.க.அலுவலர் _புலவர்.சிலம்பூர்க்கிழான்_ அவர்களும்*
*⚡கள்ளக்குறிச்சி கல்லைத் தமிழ்ச்சங்கம் _புலவர்.செ.மதிவாணன்_ அவர்களும்,*
*⚡கள்ளக்குறிச்சி TNSLF Society தலைவர் _திரு.சு.சுந்தரவடிவேல்_ அவர்களும்,*
*⚡சென்னை TNSLF Society பொதுச்செயலாளர் _திரு.மு.ஷேக்முகைதீன்_ அவர்களும்,*
*⚡சென்னை TNSLF Society து.செயலாளர் _திரு.மு.முத்துக்குமாரசாமி_ அவர்களும்,*
*⚡கள்ளக்குறிச்சி TNSLF Societly பொருளாளர் _திரு.நா.சுரேஷ்_ அவர்களும் வாழ்த்துரை வழங்கினார்கள்.*
*🏆கீழ்ப்பாடி அ.மே.நி.பள்ளி தமிழ் பட்டதாரி ஆசிரியர் _திரு.ப.சௌந்தரராஜன்_ அவர்கள் விழாவினை சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்தார்.*
*🏆திருமதி.உஷாராணி, திருமதி.இரா.கோ.கலைமகள் காயத்ரி, ஆகியோர் விழா தொகுப்பாளர்களாக சிறப்பாக பணியாற்றினார்கள்.*
*🏆சங்கராபுரம் கல்வியாளர் _திரு.ப.செந்தில்முருகன்_ நன்றியுரை வழங்கினார்.*
*******************************
💐🏆💐🏆💐🏆💐🏆💐🏆💐
*⚡இவ்விழாவினை சிறப்பாக ஏற்பாடு செய்த சிவகாமி அகாடமி நிறுவன தலைவர் _திரு.ஆ.கோபி_ அவர்களுக்கும்,*
*⚡விழாவினை தலைமையேற்று நிகழ்த்திய கள்ளக்குறிச்சி மாவட்டக் கல்வி அலுவலர் _திருமதி.கா.கார்த்திகா_ அவர்களுக்கும்,*
*⚡விழா சிறப்பு விருந்தினர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், தொகுப்பாளர்கள், விழா குழுவினர்கள் மற்றும் பத்திரிகை ஊடக நண்பர்கள் அனைவருக்கும்,*
*⚡விழா சிறப்பாக நடத்த இடம் வழங்கிய கள்ளக்குறிச்சி ஏ.கே.டி கல்வி நிறுவன நிறுவனர் அவர்களுக்கும்,*
*⚡விழா கதாநாயகர்களாக வீற்றிருந்து விருதுகளை பெற்றுக்கொண்ட அனைவருக்கும்,*
*⚡கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும்,*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
*_"AYAN EDUCATION NEWS"_* _AYAN SARAVANAN_ *சார்பாக நன்றி கலந்த வாழ்த்துகளையும், வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.*
www.ayaneducationnews.blogspot.com
💐🏆💐🏆💐🏆💐🏆💐🏆💐
Wednesday, 6 January 2021
*🗣️மத்திய அரசு ஊழியர்கள் பணி ஓய்வு வயது: புது உத்தரவு*
*🗣️மத்திய அரசு ஊழியர்கள் பணி ஓய்வு வயது: புது உத்தரவு*
_மத்திய அரசு ஊழியர்கள் பணி ஓய்வு வயது:_
*🗣️புது உத்தரவு மத்திய அரசு ஊழியர்கள் இனி 33 ஆண்டு பணிக்காலம் அல்லது 60 வயது – ஓய்வூதியத்திற்கான மசோதாவை நிதி அமைச்சகம் நிறைவேற்றியது.*
*🗣️அரசு ஊழியர்கள் இனி 33 ஆண்டு பணிக்காலம் அல்லது 60 வயது, இதில் எது முதலில் வருகிறதோ அதில் ஓய்வு பெற வேண்டும். இது 1.4.2021 முதல் அமுலுக்கு வருகிறது. இதனால் தற்போது 33 ஆண்டு பணிக்காலம் முடித்தவர்கள் ஒய்வு பெறுகிறார்கள்.*
*🗣️ஓய்வூதியத்திற்கான மசோதாவை நிதி அமைச்சகம் நிறைவேற்றியது. எது முதலில் வந்தாலும் 33 ஆண்டுகள் சேவை அல்லது 60 வயது.*
*🗣️அதன்படி 22 வயதில் சேர்ந்த ஒருவர் 55 வயதில் ஓய்வு பெறுவார்.*
_நன்றி!_
*இந்தியா Tamil Mint* _டிசம்பர் 31, 2020_
*🧫கர்நாடகாவில் ஒரே நாளில் 25 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.*
*🧫கர்நாடகாவில் ஒரே நாளில் 25 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.*
*🧫கொரோனா பரவல் சற்று குறையத் தொடங்கியதை அடுத்து நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் செயல்பட தொடங்கியுள்ளனர். ஆனால் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றுவது மிக அவசியம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.*
*🧫கொரோனா பரவலுக்கு இடையே கர்நாடகாவில் வழிகாட்டு நெறிமுறைகளுடன் கடந்த 1ஆம் தேதி பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. ஆனாலும் பள்ளியில் நோய் தொற்று ஏற்பட தொடங்கியுள்ளது.*
*🧫பள்ளிகள் திறந்த 6 நாட்களே ஆகியுள்ள நிலையில் ஆசிரியர்களும் , மாணவ, மாணவிகளும் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.*
*🧫அந்த வகையில், ஹாவேரி, சிக்கமகளூருவில் 3 ஆசரியர்களுக்கு கொரோனா ஏற்கனவே கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.*
*🧫இதனால் அந்த பள்ளிகளுக்கு 7 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் மாநிலத்தில் 25 ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.*
Friday, 1 January 2021
*📲அனைத்து ஆசிரியர்களுக்கும் ஐனவரி 18 முதல் Jolly Phonics ஆன்லைனில் பயிற்சி நடத்துவதற்கான வழிகாட்டுதல்!*
*📲அனைத்து ஆசிரியர்களுக்கும் ஐனவரி 18 முதல் Jolly Phonics ஆன்லைனில் பயிற்சி நடத்துவதற்கான வழிகாட்டுதல்!*
*📲ஈரோடு மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் வாயிலாக 2018-19ம் கல்வியாண்டில் Jolly Phonics பயிற்சி தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது.*
*📲இதனைத்தொடர்ந்து அரசு மற்றும் அரசுதவி பெறும் பள்ளிகளின் அனைத்து ஆசிரியர்களுக்கும் (SGT, BT and PG) Phonetic பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டு மாவட்ட அளவில் பயிற்சி கட்டகம் தயாரிக்கப்பட்டது.*
*📲Covid – 19 கால சூழ்நிலை மற்றும் சமூக இடைவெளி ஆகியவற்றை கருத்தில் கொண்டு இப்பயிற்சியினை காணொளி வாயிலாக வழங்கவும், முதற்கட்டமாக மாவட்ட அளவிலான பயிற்சி 04.01.2021 முதல் 8 நாட்களுக்கு அரை நாள் வீதம் (09.30 AM – 01.00PM) வரை காணொளி வாயிலாக பயிற்சி அளிக்கவும், இதனைத் தொடர்ந்து வட்டார அளவில் அனைத்து ஆசிரியர்களுக்கும் 18.01.2021 முதல் காணொளி வாயிலாக பயிற்சி அளிக்கவும் திட்டமிடபட்டுள்ளது.*
*📲மேற்காண் பயிற்சியினை சிறந்த முறையில் அளிக்கவும், உரிய நேரத்தில் ஆசிரியர்களை பயிற்சியில் பங்கேற்கவும் அறிவுறுத்துமாறு அனைத்து தலைமையாசிரியர்கள் மற்றும் சம்மந்தப்பட்ட கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பயிற்சி 9.45AM – 11:15AM வரை முதல் பாடவேளை 11.15AM – 11.30AM வரை இடைவேளை 11.30 AM – 1.00PM வரை இரண்டாவது பாட வேளைகளாக நடைபெறும் பயிற்சிக்கான Link மூலமாக 9.30 ( மணிக்கு பயிற்சியில் இணையவும், இணைந்தவுடன் தங்களது Mic mute செய்திடவும் தங்களது வருகையை Google Meet ல் உள்ள Chat Boxல் பதிவிட வேண்டும் பயிற்சியின்போது வழங்கப்படும் கருத்துக்களை குறிப்பெடுத்து ஒவ்வொரு நாள் இறுதியில் கேட்கப்படும் கேள்விற்கு பதிலளிக்க வேண்டும். பயிற்சியின் இடையே கேட்கப்படும் கேள்விகளுக்கு Chat Box வழியாக பதியளிக்கலாம்.*
*📲பயிற்சி சார்ந்து கருத்தாளரிடம் கேள்விகள் ஏதேனும் கேட்கவேண்டும்போது மட்டுமே Mic Unmute செய்து கேட்க வேண்டும் இரண்டாவது வேளை இறுதியில் Google fom வழியாக கேட்கப்படும் கேள்விகளுக்கு பங்கேற்பாளர்கள் அனைவரும் பதிலளிக்க வேண்டும். பயிற்சியில் பங்கேற்கும் ஆசிரியர்கள் Google Meeti Present பட்டனை அழுத்தக்கூடாது என்பதனையும் Google Meet எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதனை குறுவளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் ஆசிரியர்களுக்கு தெளிவுபடுத்த கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.*
*📲ஒன்றியங்களில் உள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கருத்தாளர்கள் தேர்வு செய்ய வேண்டும். கருத்தாளர்கள் மற்றும் கணினி இயக்க தெரிந்த ஒரு நபருடன் இணைந்து 90 – 95 ஆசிரியர்களுக்கு ஒரு Batch ஆக பயிற்சி அளிக்கலாம் ஒன்றியத்திலுள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கைக்கேற்ப Batch எண்ணிக்கை வட்டார அளவில் தேர்வு செய்து ஆசிரியர்களுக்கு பயிற்சியினை 18.01.2021 தொடங்கி – 28.02.2021 க்குள் பயிற்சியளித்து முடிக்கும் வகையில் அட்டவணை தயார் செய்து பயிற்சி அளிக்க வேண்டும்.மாநில திட்ட இயக்ககத்தின் வாயிலாக நடைபெறும் பயிற்சிகள் பாதிக்காவண்ணம் வட்டார அளவிலான பயிற்சி அட்டவணை தயார் செய்து பயிற்சி நடத்தப்படவேண்டும்.*
*📲இணைய வசதி இல்லாத ஆசிரியர்கள் பயிற்சியில் பங்கேற்கும் வகையில் வட்டார வளமையத்தில் நேரடியாக சமூக இடைவெளியுடன் பங்கேற்க செய்ய உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம் ஆசிரியர்களின் பங்கேற்பினை உறுதி செய்யவும், ஆசிரியர்களின் வருகை பதிவினை கண்காணித்து அறிக்கை அளிக்கவும் அனைத்து தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், பயிற்சியில் பங்கேற்கும் ஆசிரியர்கள் பயிற்சி சார்ந்த கட்டகத்தை நகல் எடுத்து பயிற்சியின் போது கட்டாயம் பயன்படுத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.*
*📲பயிற்சி நடைபெறுவதை இனையவாயிலாக (Link) கண்காணித்திட மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் பயிற்சியினை எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல் நடத்திடவும், பயிற்சியில் பங்கேற்றோர் விவரம், ஆசிரியர்களின் பின்னூட்ட அறிக்கை மற்றும் புகைப்பட ஆவணங்களுடன் அறிக்கை அளிக்க அனைத்து வட்டார வள மைய பொறுப்பு ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.*




















