AYAN EDUCATIONA NEWS

AYAN NEWS


Tuesday, 8 June 2021

*🗣️14.06.2021 முதல் பள்ளி _தலைமை ஆசிரியர்கள்_ மற்றும் _அலுவலக பணியாளர்கள்_ தினசரி வருகை புரிய வேண்டும் - பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு*

*🗣️14.06.2021 முதல் பள்ளி _தலைமை ஆசிரியர்கள்_ மற்றும் _அலுவலக பணியாளர்கள்_ தினசரி வருகை புரிய வேண்டும் - பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு*

*✍️பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள், சென்னை-6 ந.க.எண். 34462/பிடி1/இ1/2020, நாள்.08.06.2021*

*✍️அரசாணை எண்.613, வருவாய் மேலாண்மைத் துறை நாள்:05.06.2021- ன் படி, நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று காரணமாக மாணவர் நலன் கருதி இந்த ஆண்டு பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வு நடத்தப்படமாட்டாது  என மாண்புமிகு தமிழ்நாடு  முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்குவது, உயர்கல்வி பயிலுவதற்கான சான்றிதழ்கள் வழங்குவது சார்ந்த பணிகள் நடைபெற உள்ளதாலும் மாணவர்கள் சேர்க்கை ஆரம்பிக்கப்பட உள்ளதாலும் மற்றும் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய விலையில்லா பாட புத்தகங்கள் மற்றும் கற்றல் கற்பித்தலுக்கு தேவையான இதர நலத்திட்டங்கள் வழங்க வேண்டி உள்ளதாலும், பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளை சுத்தம் செய்வது சார்ந்தும் மற்றும் மாணவர்கள் கல்வி தொலைக்காட்சி கற்றல் சார்ந்த நிகழ்ச்சிகளை பார்வையிட செய்வது சார்ந்தும், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் (தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை) பணிபுரியும் _தலைமையாசிரியர்கள்_ மற்றும் _அலுவலகப் பணியாளர்கள்_ அனைவரும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை (SOP) பின்பற்றி 14.06.2021 முதல் பணிக்கு வருகை புரிய வேண்டுமென பள்ளிக்கல்வி ஆணையர் அவர்களால் அறிவுறுத்தப்படுகிறது.*

No comments:

Post a Comment