*🧫கர்நாடகாவில் ஒரே நாளில் 25 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.*
*🧫கொரோனா பரவல் சற்று குறையத் தொடங்கியதை அடுத்து நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் செயல்பட தொடங்கியுள்ளனர். ஆனால் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றுவது மிக அவசியம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.*
*🧫கொரோனா பரவலுக்கு இடையே கர்நாடகாவில் வழிகாட்டு நெறிமுறைகளுடன் கடந்த 1ஆம் தேதி பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. ஆனாலும் பள்ளியில் நோய் தொற்று ஏற்பட தொடங்கியுள்ளது.*
*🧫பள்ளிகள் திறந்த 6 நாட்களே ஆகியுள்ள நிலையில் ஆசிரியர்களும் , மாணவ, மாணவிகளும் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.*
*🧫அந்த வகையில், ஹாவேரி, சிக்கமகளூருவில் 3 ஆசரியர்களுக்கு கொரோனா ஏற்கனவே கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.*
*🧫இதனால் அந்த பள்ளிகளுக்கு 7 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் மாநிலத்தில் 25 ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.*
No comments:
Post a Comment