AYAN EDUCATIONA NEWS

AYAN NEWS


Saturday, 29 February 2020

*ஒழுங்கு நடவடிக்கையில் தண்டனை பெற்றால் ஆசிரியர்களுக்கு 5 ஆண்டு முன்னுரிமை பட்டியலில் இடம் இல்லை - தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு.*

*ஒழுங்கு நடவடிக்கையில் தண்டனை பெற்றால் ஆசிரியர்களுக்கு 5 ஆண்டு முன்னுரிமை பட்டியலில் இடம் இல்லை - தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு.*

🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟
⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡

*🎯ஒழுங்கு நடவடிக்கையில் தண்டனை வழங்கப்பட்டிருந்தால் அந்த ஆசிரியர்களை 5 ஆண்டு காலத்திற்கு முன்னுரிமை பட்டியலில் சேர்க்க கூடாது என்று தொடக்க கல்வி இயக்கு நர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.*

*🎯தமிழகத்தில் தொடக்க கல்வி, ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு பள்ளி ஆசிரியர்கள் 1.1.2020 நிலவரப்படி பதவி உயர்வுக்கு தகுதியான தேர்ந்தோர் பட்டியல் தயாரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கி தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு பிறப்பித்துளார்.*

_இதுதொடர்பான உத்தரவில் கூறியிருப்பதா வது:_

*🎯அனைத்து வகை ஆசிரியர்களுக்கு தேர்ந்தோர் பட்டியல் வட்டார கல்வி அலுவலரால் தயாரிக்கப்பட்டு அந்தந்த கல்வி மாவட்ட அளவில் இரண்டு ஒன்றியங்களுக்கு ஒருவட்டார கல்வி அலுவலர், ஒரு கண்காணிப்பாளர் மற்றும் ஒரு உதவியாளர் ஆகியோர் கொண்ட குழு அமைத்து கல்வி மாவட்ட தலைமையிடத்தில் முகாம் அமைத்து சரி பார்த்து மாவட்ட கல்வி அலுவலரால் ஒப்பளிக்க வேண்டும். அதனை வட்டார கல்வி அலுவலர் அறிவிப்பு பலகையில் வெளியிட்டு அனைத்து ஆசிரியர்களிடமும் ஒப்புகை பெறவேண்டும்.*

*🎯தமிழ் நாடு குடிமுறைப் பணி ஒழுங்குமுறையும் மேல் முறையீடும் விதிகள் கீழ் ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் இருந்தால் முன்னுரிமை பட்டியலில் சேர்க்க கூடாது.*

*🎯ஒழுங்கு நடவடிக்கையில் கண்டனம், தண்டனை தவிர்த்து பிற தண்டனைகள் வழங்கப்பட்டிருந்தால் 5 ஆண்டு காலத்திற்கு முன்னுரிமை பட்டியலில் சேர்க்கக் கூடாது.*

*🎯அனைத்து வகை ஆசிரியர்களின் தேர்ந்தோர் பட்டியல் தயார் செய்யும் போது பதவி உயர்வுக்கு தேவையான கல்வித்தகுதி அல்லது அதற்கு இணையான கல்வி தகுதி ஆகியவை உரிய காலக்கெடுவிற்குள் பெற்றுள்ளார் களா என்பதை உறுதி செய்து கொண்டு பதவி உயர்வுக்கான தேர்ந்தோர் பட்டியல் தயார் செய்ய அனைத்து வட்டார கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.*

*🎯இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.*

🗝ayaneducationnews.blogspot.com

*வட்டாரக் கல்வி அலுவலர் பதவி உயர்விற்கு தகுதிவாய்ந்த நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களை மாநில அளவில் முன்னுரிமைப் பட்டியல் தயார் செய்திட தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்கள் செயல்முறைக் கடிதம் வெளியிட்டுள்ளார்.*

*வட்டாரக் கல்வி அலுவலர் பதவி உயர்விற்கு தகுதிவாய்ந்த நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களை மாநில அளவில் முன்னுரிமைப் பட்டியல் தயார் செய்திட  தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்கள் செயல்முறைக் கடிதம் வெளியிட்டுள்ளார்.*

🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟
⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡

*🎯தமிழ்நாடு தொடக்கக்கல்வி சார்நிலைப் பணி வட்டார கல்வி அலுவலர் பணியிடத்தினை பதவி உயர்வு மூலம் நியமனம் - 2020 ஆம் ஆண்டு 01.01.2020 நிலவரப்படி மாநில அளவில் முன்னுரிமைப் பட்டியல் (seniority list) தயார் செய்தல் - வட்டார கல்வி அலுவலர் பணிக்கு நிர்ணயிக்கப்பட்ட 4 தேர்வுகளிலும் முறையாக தேர்ச்சி பெற்று 31.12.2011 க்கு முன்னர் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியராக பணியில் சேர்ந்து 31.12.2019 க்குள் முழு தகுதி பெற்ற அரசு/ நகராட்சி/ ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியரின் விபரங்களை அனுப்பக் கோரி தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்கள் செயல்முறைக் கடிதம் வெளியிட்டுள்ளார்.*

🗝ayaneducationnews.blogspot.com

*1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் கற்றல் செயல்பாடுகளை கண்காணிக்க மொபைல் ஆப் - தமிழகம் முழுவதும் செயல்படுத்த திட்டம்.*

*1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் கற்றல் செயல்பாடுகளை கண்காணிக்க மொபைல் ஆப் - தமிழகம் முழுவதும் செயல்படுத்த திட்டம்.*

🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟
⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡

*📲ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை வகுப்பறையில் மாணவர்களின் கற்றல் செயல்பாடுகளை கண்காணிக்க மொபைல் ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் இதனை தமிழகம் முழுவதும் செயல்படுத்த கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.*

*🎯தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்கள் வகுப்பறைகளில் எவ்வாறு கவனம் செலுத்துகிறார்கள் என்பதை கண்காணிக்க கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.*

*📲இதில் ஆசிரியர்கள் பாடம் போதிக்கும்போது அது எவ்வாறு மாணவர்களை சென்றடைந்துள்ளது என்ற கற்றல் விளைவு அடைவு நிலைகள் கண்காணிக்கப்ப டுகிறது.*

*📲இதன் ஒரு பகுதியாக வகுப்பறை கற்றல்-கற்பித்தல் நிகழ்வுகளை உற்று நோக்கி கற்றல் கற்பித்தல் நிகழ்வுகளை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.*

*📲மேலும் அறிவியல் தொழில்நுட்ப சாதனங்களை பயன்படுத்தி பள்ளி கல்வித்துறையில் உள்ள அனைத்து ஆய்வு அலுவலர்களும், வகுப்பறை நிகழ்வுகளை உற்று நோக்கும் வகையிலும் 'தமிழ்நாடு வகுப்பறை நோக்கின் செயலி' ஒன்று உருவாக்கப்பட் டுள்ளது.*

_'அப்சர்வேசன் மொபைல் ஆப்'_ எனப்படும் இந்த செயலி ஆண்ட்ராய்டு மொபைல்களில் பயன்படுத்தும் வகையில் உள்ளது.

*📲இந்த ஆப் சென்னை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் பரிட்சார்த்த முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.*

*📲தமிழ்நாடு வகுப்பறை நோக்கின் செயலி மூலம் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள ஒவ்வொரு மாணவர்களின் கற்றல் விளைவு அடைவு நிலைகளை முறையாக கண்காணித்து முன்னேற்றம் அடையச்செய்ய எளிமையாக இருக்கும்.*

*📲கற்றலில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு தனிக்கவனம் செலுத்த முடிகிறது என சென்னை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஆய்வு நடத்திய அலுவலர்கள் தெரிவித்துள்ளார். இது ஆசிரியர்கள் அலுவலர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.*

*📲இந்நிலையில் சென்னை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள்     தொடர்ந்து அனைத்து மாவட்டங்களுக்கும் இந்த செயலியின் உபயோகத்தை உடனடியாக கொண்டு செல்ல ஒருங்கி ணைந்த பள்ளி கல்வியின் மாநில திட்ட இயக்ககம் முடிவு செய்துள்ளது.*

*📲இது தொடர்பாக சென்னை, திருவண்ணாமலை தவிர இதர 30 மாவட்டங்களுக்கு இந்த செயலியை பயன்படுத்தும் வகையில் அனைத்து அலுவலர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.*

*📲வட்டாரவளமைய அளவில் கணினி தொழில்நுட்பதில் நன்கு கற்றுத்தெரிந்த மொபைல் போன் நன்றாக பயன்படுத்துகின்ற ஒரு ஆசிரியர் பயிற்றுநர் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்டோருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள் ளது. இந்த பயிற்சி மாநில திட்ட இயக்ககத்தால் அளிக்கப்படுகிறது.*

*📲இதன் தொடர்ச்சியாக மாணவர்களின் வகுப்பறை செயல்பாடுகளை மொபைல் ஆப் மூலம் மாநிலம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் கண்காணிக்கும் பணிகள் விரைவில் தொடங்கும் என்று கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.*

🗝ayaneducationnews.blogspot.com

SoraTemplates

SoraTemplates


Sora Viral

Posted: 29 Feb 2020 09:53 AM PST

Free Version

  • Remove Footer Credits
  • One Time Payment
  • No Encrypted Scripts
  • Lifetime Premium Support
  • For Unlimited Domains
  • Lifetime Template Updates
  • Download Now
    Free Version

Premium Version

Description
Sora Viral Blogger Template is an indispensable news & magazine blogger blogspot template with a clean, modern design suitable for everyone who wants to share their stories about today's ever-changing technology, the latest breaking news or the hottest trending products with latest and unique day and night features.
Download Now
Documentation
Video Documentation
You can check this below video to understand the setup process much more easily, just click the below image to watch the video directly on YouTube, or click this link - How To Setup Sora Viral Blogger Template
Custom Template
We provide plenty of templates for free but if you want something unique for your blog then let us create a unique design for your blog, Just tell us your needs and we will convert your dream design into reality.
Contact Us Now
Created: 29 February 2020

*அரசு ஊழியர்கள் கண்டிப்பாக அடையாள அட்டை அணிய வேண்டும் - தமிழக அரசு திடீர் உத்தரவு*

*அரசு ஊழியர்கள் கண்டிப்பாக அடையாள அட்டை அணிய வேண்டும் - தமிழக அரசு திடீர் உத்தரவு*

🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟
⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡

*🎯அரசு ஊழியர்கள் கண்டிப்பாக புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அணிய வேண்டும், இல்லையென்றால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு திடீர் உத்தரவு பிறப்பித் துள்ளது.*

*🎯இதுகுறித்து பணியாளர் நிர் வாக சீர்திருத்தத்துறை செயலாளர் ஸ்வர்ணா நேற்று அனைத்து மாவட்ட கலெக்டர்கள், துணை செயலாளர்கள், துறை தலைவர்கள், மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள உயர் அதிகாரிகள், டிஎன்பிஎஸ்சி உயர் அதிகாரிகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.*

_அதில் கூறி இருப்பதாவது;_

*அரசு ஊழியர்கள் கண்டிப்பாக அடையாளஅட்டை அணிய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2018 ஜூலை 17ம் தேதி உத்தரவு பிறப்பித் துள்ளது.*

*🎯இதுதொடர்பாக பாக அடையாள அட்டை அணிய வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது. ஆனாலும் பலர் அடையாள அட்டை அணிவதில்லை என்று புகார் வந்துள்ளது.*

*🎯இது தவறான நடவடிக்கை யாகும். அதனால், அந்தந்த துறை தலைவர்கள் தங்கள் துறையின் கீழ் பணியாற்றும் அரசு ஊழியர்கள் பணியின்போது புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அணிவதை உறுதி செய்ய வேண்டும். அப்படி அணியாத வர்கள் மீது துறை தலைவர்கள் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.*

🗝ayaneducationnews.blogspot.com

*17(பி) ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டவர்கள் விவரம் கோரல் சார்ந்து தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்.*

*17(பி) ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டவர்கள் விவரம் கோரல் சார்ந்து தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்.*

🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟
⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡

*🎯தொடக்கக்கல்வி - பேரூராட்சி, நகராட்சி, அரசு துவக்க/ நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மீது தமிழ்நாடு குடிமைப்பணி (ஒழுங்கு முறைகள் மற்றும் மேல்முறையீடு) விதிகளில் விதி 17(பி) ன்படி ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டவர்கள் விவரம் கோரல் சார்ந்து தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்.*

*🎯இவ்வியக்க கட்டுப்பாட்டில் உள்ள ஊராட்சி / நகராட்சி / அரசு துவக்க/ நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களன் மீது தமிழ்நாடு குடிமைப்பணி (ஒழுங்கு முறைகள் மற்றும் மேல்முறையீடு) விதிகளில் விதி 17(பி)-ன்படி ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டவர்கள் பெயர், விபரம், விசாரணை அலுவலர் நியமனம் செய்யப்பட்ட விபரம், விசாரணை அறிக்கை பெறப்பட்ட விபரம் மற்றும் இறுதி ஆணை வழங்கப்பட்ட விபரங்களை அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.*

🗝ayaneducationnews.blogspot.com

Monday, 24 February 2020

*UDISE + Forms - செய்தி துளிகள் மற்றும் பதிவேற்றம் செய்யும் முறைகள் குறித்த காணொளி*

*UDISE + Forms - செய்தி துளிகள் மற்றும் பதிவேற்றம் செய்யும் முறைகள் குறித்த காணொளி*

🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟
⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡

*//அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கு வணக்கம்.//*

*📲EMIS School login வலைதளத்தில் udise + forms page open ஆகி உள்ளது.*

*📲எனவே 30 செப்டம்பர் 2019 உள்ளப்படி அனைத்து விவரங்களையும் உடனடியாக emis வலைதளத்தில் பதிவேற்றம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.*

*********************

*_HOW TO ENTER UDICE PLUS - STEP BY STEP VIDEO_*
👇👇👇👇👇👇👇👇
https://youtu.be/qD-B4ablGtA

🗝ayaneducationnews.blogspot.com

*அனைத்து வகைப் பள்ளிகளிலும் UDISE PLUS படிவத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவு - திண்டுக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைக் கடிதம்.*

*அனைத்து வகைப் பள்ளிகளிலும் UDISE PLUS படிவத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவு - திண்டுக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைக் கடிதம்.*

🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟
⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡

*📲அனைத்து வகைப் பள்ளிகளிலும் UDISE PLUS படிவத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட வசதிகள் ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது . இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள UDISE PLUS DCF படிவத்தை பூர்த்தி செய்து தயாராக வைக்க வேண்டும்.*

*📲அவ்வாறு பூர்த்தி செய்த படிவத்தை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட வசதி ஏற்படுத்திய உடனே பதிவேற்றம் செய்திட வேண்டும்.*

*📲UDISE PLUS DCF படிவத்தில் பூர்த்தி செய்யப்பட்ட தகவலுக்கும் , EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்த தகவலுக்கும் எவ்வித முரண்பாடும் ஏற்படாவண்ணம் கவனத்துடன் பதிவேற்றம் செய்திட வேண்டும் என அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.*

*📲ஒவ்வொரு ஆசிரியர்பயிற்றுநரும் தங்களுக்குகீழ் உள்ள பள்ளிகளில் பூர்த்தி செய்யப்பட்ட DCF படிவமும் , EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட தகவலும் சரியானது என சான்று அளிக்க வேண்டும்.*

*📲வட்டார கல்வி அலுவலர்கள் , மாவட்டக் கல்வி அலுவலர்கள் தங்களுக்குகீழ் உள்ள அனைத்து வகைப் பள்ளிகளின் சரியான தகவல் பதிவேற்றம் செய்யப்பட்டதை உறுதி செய்து அதற்குரிய சான்றை பெற்று முதன்மைக்கல்வி அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும்.*

*********************

*_HOW TO ENTER UDICE PLUS - STEP BY STEP VIDEO_*
👇👇👇👇👇👇👇👇
https://youtu.be/qD-B4ablGtA

🗝ayaneducationnews.blogspot.com

Sunday, 23 February 2020

*பள்ளிகளில் நாளை (24.02.20) காலை வழிபாட்டுக் கூட்டத்தில் எடுக்கப்பட வேண்டிய உறுதிமொழி*

 *பள்ளிகளில் நாளை (24.02.20) காலை வழிபாட்டுக் கூட்டத்தில் எடுக்கப்பட வேண்டிய உறுதிமொழி*                  

🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟
⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡

*🙋‍♂️முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதிமொழி*                        

*🗣இந்திய குடிமகன் ஆகிய நான் ஜாதி மதம் இனம் மொழி சமூக பொருளாதார பாகுபாடு இல்லாமல் அனைத்து குழந்தைகளையும் சமமாக நடத்துவேன்.*         

*🗣 எனது செயல்பாடுகளால் எந்த ஒரு குழந்தையையும் உடல்ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிக்காத வகையில் கவனமுடன் நடந்து கொள்வேன்.*             

*🗣எனது கவனத்திற்கு வரும் குழந்தைகளுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் வன்முறைகள் மற்றும் எந்த ஒரு பாதிப்பையும் தடுப்பதற்கான முழு முயற்சியில் ஈடுபடுவேன், மேலும் இதனை உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்.*                    

*🗣 இன்றைய குழந்தைகள் நாளைய தலைவர்கள் என உணர்ந்து அவர்களின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்கு என்னால் இயன்ற பங்களிப்பை அளிப்பேன்.*                    

*🗣குழந்தைத் திருமணம் பற்றி தெரியவந்தால் அதை தடுத்து நிறுத்துவதற்கான எல்லா முயற்சிகளிலும் ஈடுபடுவேன்.*                    

*🗣 நான் குழந்தை தொழிலாளர்கள் இல்லாத சமூகத்தை உருவாக்கிட உறுதுணையாக இருப்பேன்.*                     

*🗣இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் உரிமைகள் மீதான உடன்படிக்கையில் வழங்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கான உரிமைகளை அனைத்து குழந்தைகளுக்கும் கிடைக்கும் வகையில் செயல்படுவேன் என உளமார உறுதி கூறுகிறேன்.*

🗝ayaneducationnews.blogspot.com

*இஸ்ரோவின் விஞ்ஞானி பயிற்சி விண்ணப்பிக்க நாளை (பிப்.24) கடைசி*

*இஸ்ரோவின் விஞ்ஞானி பயிற்சி விண்ணப்பிக்க நாளை (பிப்.24) கடைசி*

🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟
⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡

*📡'யுவிகா' திட்டத்தின்கீழ் மாண வர்களுக்கு விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல் மற்றும் செய் முறை விளக்கப் பயிற்சிகளும் அளிக்கப்படும்.*

*📡இதற்காக நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலத் தில் இருந்தும் 3 பேர் தேர்வு செய்யப்படுவார்கள்.*

*📡அதன்படி நடப்பு ஆண்டுக் கான 'யுவிகா' பயிற்சி இஸ்ரோ வின் 4 மையங்களிலும் மே 11 முதல் 22-ம் தேதி வரை நடைபெற உள்ளது.*

*📡இதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த பிப்ரவரி 3-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.*

*📡விருப்பமுள்ள மாணவர்கள் நாளைக்குள் (பிப்.24) www.isro.gov.in என்ற இணையதளம் வழியாக விண் ணப்பிக்க வேண்டும்.*

*📡பள்ளியில் 9-ம் வகுப்பு படிக் கும் மாணவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும்.*

*📡பயிற்சிக்கு தேர்வாகும் மாணவர் களின் தற்காலிக பட்டியல் மார்ச் 2-ல் வெளியாகும்.*

*📡மேலும் தகவல்களைப் பெற 080 2217 2269 தொலைபேசி எண் அல்லது yuvika2020@isro.gov.in மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொள்ளலாம் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.*

🗝ayaneducationnews.blogspot.com

Thursday, 20 February 2020

SoraTemplates

SoraTemplates


Alva

Posted: 19 Feb 2020 10:18 PM PST

Free Version

  • Remove Footer Credits
  • One Time Payment
  • No Encrypted Scripts
  • Lifetime Premium Support
  • For Unlimited Domains
  • Lifetime Template Updates
  • Download Now
    Free Version

Premium Version

Description
Alva Blogger Template is a beautiful, handcrafted blogging blogspot theme that is easy to use and flexible for your blogging needs. Theme is based on latest blogger code and includes modular concept and flexible magazine / blog layouts with a responsive and elegant styling.

Download Now
Documentation
Video Documentation
You can check this below video to understand the setup process much more easily, just click the below image to watch the video directly on YouTube, or click this link - How To Setup Alva Blogger Template
Custom Template
We provide plenty of templates for free but if you want something unique for your blog then let us create a unique design for your blog, Just tell us your needs and we will convert your dream design into reality.
Contact Us Now
Created: 20 February 2020

Tuesday, 18 February 2020

*தமிழ்நாடு அறிவியல் இயக்கம் துளிர் திறன் அறிதல் தேர்வில் மாநில அளவில் தேர்ச்சி பெற்ற சின்னசேலம் வட்டார மாணவிக்கு பாராட்டுக்கள்*

*தமிழ்நாடு அறிவியல் இயக்கம் துளிர் திறன் அறிதல் தேர்வில் மாநில அளவில் தேர்ச்சி பெற்ற சின்னசேலம் வட்டார மாணவிக்கு பாராட்டுக்கள்*

🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟
⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡

*🎯தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்திய பள்ளி மாணவர்களுக்கான 2019 - 2020 ஆண்டிற்கான துளிர் திறன் அறிதல் போட்டியில் சின்னசேலம் ஒன்றியம் அலம்பலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியைச் சார்ந்த ஏழாம் வகுப்பு மாணவி M. கௌசிகவதனி மாநில அளவில் மதிப்பெண் பெற்றுள்ளார்.*

*🎯தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பாக கல்பாக்கம் அணுமின் நிலையம் அமைந்துள்ள பகுதியில் நடக்கும் பாராட்டு விழாவிற்கு கலந்துகொள்ள அழைத்துள்ளனர்.*

*🎯மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாணவிக்கு பாராட்டு சான்றும் நினைவு பரிசும் அறிவியல் வல்லுநர்களால் வழங்கப்படுகிறது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்*

_இவண்.._

*_கோ.இராமச்சந்திரன்_ SGT*
*மாவட்ட துளிர் தேர்வு ஒருங்கிணைப்பாளர்*
*தமிழ்நாடு அறிவியல் இயக்கம்*
*கள்ளக்குறிச்சி மாவட்டம்.*

🗝ayaneducationnews.blogspot.com

Monday, 17 February 2020

*பேப்பர், பேனா இல்லாமல் அதுவும் Zero பேலன்சில் மாணவர்களுக்கு சேமிப்பு கணக்கு துவக்கலாம்*

*பேப்பர், பேனா இல்லாமல் அதுவும் Zero பேலன்சில் மாணவர்களுக்கு சேமிப்பு கணக்கு துவக்கலாம்*

🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟
⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡

*⚡ஜீரோ ரூபாய் டெபாசிட்டில்  பள்ளி மாணவர்களுக்கு கியூ.ஆர். கோடு கொண்ட  அட்டையுடன் அஞ்சல் வங்கி கணக்கு துவக்கி அசத்திய பள்ளி

*⚡பள்ளி மாணவர்களுக்கு அஞ்சல் வங்கி கணக்கு அட்டை வழங்குதல் விழா*
 
*⚡தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு ஜீரோ ரூபாய் டெபாசிட்டில்  மாணவர்களுக்கு கியூ.ஆர். கோடு கொண்ட  அஞ்சல் வங்கி கணக்கு அட்டை வழங்கும் விழா நடைபெற்றது.*                                 
                        
*⚡ஆசிரியை முத்துமீனாள் வரவேற்றார்.*

*⚡பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.*

*⚡காரைக்குடி அஞ்சல் கோட்ட கண்கணிப்பாளர்  மாணவர்களுக்கு ஜீரோ ரூபாய் டெபாசிட்டில்  மாணவர்களுக்கு கியூ.ஆர். கோடு கொண்ட  அஞ்சல் வங்கி கணக்கு அட்டைகளை வழங்கி , அஞ்சல் வங்கி தொடர்பாகவும்,மாணவர்களின் சேமிப்பு தொடர்பாகவும் விளக்கினார்.*

*⚡அஞ்சலக அலுவலர்கள் கௌதம்,இருளாண்டி,கதிரேசன் ஆகியோர் ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.*

*⚡மாணவர்கள் ஜோயல் ரொனால்ட் ,ஐயப்பன்,நதியா,ஜனஸ்ரீ , ஆகியோர் பேசினார்கள்.*

*⚡நிறைவாக ஆசிரியை செல்வமீனாள் நன்றி கூறினார்.*

🗝ayaneducationnews.blogspot.com

*✍🏻இனி தலைமை ஆசிரியர்களை நேரடியாக நியமிக்கலாம் : மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அனுமதி!*

*✍🏻இனி தலைமை ஆசிரியர்களை நேரடியாக நியமிக்கலாம் : மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அனுமதி!*

🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟
⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡

*🎯தொடக்கப்பள்ளிகளில் 50 விழுக்காடு தலைமை ஆசிரியர் பணியிடங்களை நேரடியாக அரசே நியமனம் செய்யலாம் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.*

*🎯நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில், பணி மூப்பின் அடிப்படையில் தலைமை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள்.*

*🎯இதனால் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லாத சூழல் நிலவுகிறது.*

*🎯இதனை சரிசெய்யும் விதமாக 50 விழுக்காடு பள்ளிகளில் இனி தலைமை ஆசிரியர்களை நேரடியாக நியமனம் செய்து கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.*

*🎯இது நீண்ட காலமாக பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு எதிரானது என ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.*

*🎯தமிழகத்தில் உள்ள தொடக்க மற்றும் இடைநிலை பள்ளிகளில் 20 லட்சம் பேர் படித்து வருகின்றனர். ஆனால் மொத்தம் 1.2 லட்சம் ஆசிரியர்களே உள்ளனர்.*

*🎯இவர்கள் பெரும்பாலும் அதே ஊரைச் சேர்ந்தவர்களாக உள்ளதால் மாணவர்களின் மனநிலை, பெற்றோர் மற்றும் அந்த ஊரின் சூழல் குறித்த புரிதல் இருக்கும்.*

*🎯அதனால் தேர்வு நடத்தி தலைமை ஆசிரியரை நியமிக்காமல் பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கும் நடைமுறையே தொடர வேண்டுமென கேரள அரசு வலியுறுத்தியுள்ளது.*

*🎯அதேசமயம் பஞ்சாப் மற்றும் பீகார் மாநிலங்கள் தேர்வு முறையில் தலைமை ஆசிரியர்களை நியமிக்கும் பணிகளை தொடங்கிவிட்டன.*

🗝ayaneducationnews.blogspot.com

Sunday, 16 February 2020

*கள்ளக்குறிச்சி மாவட்ட சி.இ.ஓ., வாக திரு.குமரன் அவர்கள் நியமனம்*

*கள்ளக்குறிச்சி மாவட்ட சி.இ.ஓ., வாக திரு.குமரன் அவர்கள் நியமனம்*

🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟
⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡

*🙏கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய சி.இ.ஓ., நியமனம் செய்யப்பட்டுள்ளார் தமிழகத்தின்  34 வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி உதயமான பிறகு,*

*⚡கலெக்டர்,
*⚡எஸ்.பி.,*
*⚡டி.ஆர்.ஓ.,*

*உள்ளிட்ட மாவட்ட அலுவலர்கள் பொறுப்பேற்ற நிலையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் புதியதாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.*

*🙏நாகப்பட்டிணம் மாவட்டம், மயிலாடுதுறை டி.இ.ஓ., வாக பணிபுரிந்த _திரு.குமரன்_ அவர்கள்  பதவி உயர்வு பெற்று கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய சி.இ.ஓ., வாக நியமனம் செய்யப்பட்டார்.*

*🙏நாளை (17.02.2020) திங்கட்கிழமை சி.இ.ஓ, வாக பணி ஏற்க உள்ள ஐயா அவர்களுக்கு _கள்ளக்குறிச்சி மாவட்டத்தின்_ சார்பாகவும், _AYAN EDUCATION NEWS_ சார்பாகவும் நன்றி கலந்து வணக்கத்தையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.*

_🙏வாழ்த்துகளுடன்;_

*_அயன் சரவணன்._*

🗝ayaneducationnews.blogspot.com

Thursday, 6 February 2020

SoraTemplates

SoraTemplates


Sora Times

Posted: 05 Feb 2020 07:08 PM PST

Free Version

  • Remove Footer Credits
  • One Time Payment
  • No Encrypted Scripts
  • Lifetime Premium Support
  • For Unlimited Domains
  • Lifetime Template Updates
  • Download Now
    Free Version

Premium Version

Description
Sora Times Blogger Template is a creative, clean and modern elegant responsive News & Magazine latest blogspot Theme. It's perfect for any News/Magazine or any category like Blogs, Sports, Fashion, Science, Soccer, Politics, Videos, Travel, Style, Beauty, Health Magazine sites etc. It's includes everything as you needed for a News/Magazine. We believe that this blogger and unique theme will appreciate and become very functional magazine site.

Download Now
Documentation
Video Documentation
You can check this below video to understand the setup process much more easily, just click the below image to watch the video directly on YouTube, or click this link - How To Setup Sora Times Blogger Template
Custom Template
We provide plenty of templates for free but if you want something unique for your blog then let us create a unique design for your blog, Just tell us your needs and we will convert your dream design into reality.
Contact Us Now
Created: 06 February 2020

Tuesday, 4 February 2020

*தமிழ்நாட்டில் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு CEO அலுவலகம் மற்றும் அதற்கான பணியிடங்கள் தோற்றுவிக்க அரசாணை வெளியீடு!!!*

*தமிழ்நாட்டில் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு CEO அலுவலகம் மற்றும் அதற்கான பணியிடங்கள் தோற்றுவிக்க அரசாணை வெளியீடு!!!*

🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟
⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡

*🎯புதியதாக தோற்றுவிக்கப்பட்ட,*

*⚡கள்ளக்குறிச்சி,*
*⚡தென்காசி,*
*⚡திருப்பத்தூர்,*
*⚡இராணிப்பேட்டை,*
*⚡செங்கல்பட்டு.*

*ஆகிய 5 புதிய வருவாய் மாவட்டங்களில் முதன்மைக்கல்வி அலுவலகங்கள் தோற்றுவித்தல்,  அதற்கான பணியிடங்கள் மற்றும் செலவினம் அனுமதித்து தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.*

🗝ayaneducationnews.blogspot.com


*✍5,8 வகுப்பு பொதுத்தேர்வு ரத்து- தமிழக அரசு அறிவிப்பு.*

*✍5,8 வகுப்பு பொதுத்தேர்வு ரத்து- தமிழக அரசு அறிவிப்பு.*

🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟
⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡

*✍5ஆம் வகுப்பு மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு குறித்து மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு.கே.ஏ.செங்கோட்டையன் அவர்களின் அறிக்கை - நாள் 4.2.2020*

*5 மற்றும் 8வது வகுப்பு மாணவர்களுக்கு 2019-2020 ஆம் ஆண்டு முதல் பொதுத் தேர்வு நடத்துவது தொடர்பாக 13.9.2019 அன்று பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் அரசாணை வெளியிடப்பட்டது. இது தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் வரப்பெற்றன.*

*✍அவற்றை மாண்புமிகு அம்மாவின் அரசு கவனமுடன் பரிசீலித்து இந்த அரசாணையை ரத்து செய்ய முடிவெடுத்துள்ளது. எனவே, ஏற்கனவே உள்ள பழைய நடைமுறையே தொடரும் என்றும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.*

🗝ayaneducationnews.blogspot.com

Sunday, 2 February 2020

*UTA & LIONS CLUB இணைந்து வழங்கிய H5P இணையதள மென்பொருள் பயிற்சி - செய்தி துளிகள்*

*UTA & LIONS CLUB இணைந்து வழங்கிய H5P இணையதள மென்பொருள் பயிற்சி - செய்தி துளிகள்*

🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟
⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡

*🖥 UNIVERSAL TEACHERS ACADEMY (UTA) & NAINARPALAYAM LIONS CLUB இணைந்து வழங்கிய H5P இணையதள மென்பொருள் குறித்த பயிற்சி  ஞாயிற்றுக்கிழமை (02.02.2020) இன்று சின்னசேலம் வட்டார வள மையத்தில் (BRC) ல் சிறப்பாக நடைபெற்றது.*

*🖥பயிற்சிக்கு பல்வேறு மாவட்டங்களிலிருந்து 30 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஆர்வமாக கலந்துகொண்டார்கள்.*

_பயிற்சியினை நடத்தியவர்கள்:_

*_⚡திரு.சைமன்_ ஆசிரியர்,* 
*_⚡திரு.முனியப்பன்_ ஆசிரியர் மற்றும்,* 
*_⚡திரு.ராஜ்மோகன்_ ஆசிரியர்.*  

_பயிற்சி ஒருங்கிணைப்பாளர்கள்:_
 
*_⚡திரு.சரவணன்,_ ஆசிரியர்,* 
*_⚡திரு.ராமச்சந்திரன்,_ ஆசிரியர்.*

*🖥பயிற்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் சான்றிதழ் மற்றும் விருந்து உபசரிப்பு NAINARPALAYAM _LIONS CLUB_ சார்பாக வழங்கப்பட்டது.* 

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

*பயிற்சியினை சிறப்பாக நடத்திகொடுத்த UTA விற்கும், சான்றிதழ் மற்றும் விருந்து உபசரிப்பு வழங்கி உதவிய NAINARPALAYAM _LIONS CLUB_ ற்கும், பயிற்சியினை ஒருங்கிணைப்பதில் தோளோடு தோள் கொடுத்த சின்னசேலம் UTA நண்பர்களுக்கும், குடும்பத்தினருடன் ஞாயிற்றுக்கிழமை ஓய்வெடுக்காமல் பயிற்சிக்கு வருகைபுரிந்த ஆசிரியர் பெருமக்களுக்கும் UTA, CHINNASALEM சார்பாக இதயம் கனிந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

*SCERT ICT விரிவுரையாளர் திரு.ஆசிர் ஜுலியஸ் அவர்களுக்கும் இந்நேரத்தில் UTA-CHINNASALEM சார்பாக நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்.*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

_🤝கற்றதை பகிர ஆவலுடன்;_

*_UTA,_ CHINNASALEM*