AYAN EDUCATIONA NEWS

AYAN NEWS


Saturday, 29 February 2020

*1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் கற்றல் செயல்பாடுகளை கண்காணிக்க மொபைல் ஆப் - தமிழகம் முழுவதும் செயல்படுத்த திட்டம்.*

*1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் கற்றல் செயல்பாடுகளை கண்காணிக்க மொபைல் ஆப் - தமிழகம் முழுவதும் செயல்படுத்த திட்டம்.*

🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟
⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡

*📲ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை வகுப்பறையில் மாணவர்களின் கற்றல் செயல்பாடுகளை கண்காணிக்க மொபைல் ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் இதனை தமிழகம் முழுவதும் செயல்படுத்த கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.*

*🎯தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்கள் வகுப்பறைகளில் எவ்வாறு கவனம் செலுத்துகிறார்கள் என்பதை கண்காணிக்க கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.*

*📲இதில் ஆசிரியர்கள் பாடம் போதிக்கும்போது அது எவ்வாறு மாணவர்களை சென்றடைந்துள்ளது என்ற கற்றல் விளைவு அடைவு நிலைகள் கண்காணிக்கப்ப டுகிறது.*

*📲இதன் ஒரு பகுதியாக வகுப்பறை கற்றல்-கற்பித்தல் நிகழ்வுகளை உற்று நோக்கி கற்றல் கற்பித்தல் நிகழ்வுகளை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.*

*📲மேலும் அறிவியல் தொழில்நுட்ப சாதனங்களை பயன்படுத்தி பள்ளி கல்வித்துறையில் உள்ள அனைத்து ஆய்வு அலுவலர்களும், வகுப்பறை நிகழ்வுகளை உற்று நோக்கும் வகையிலும் 'தமிழ்நாடு வகுப்பறை நோக்கின் செயலி' ஒன்று உருவாக்கப்பட் டுள்ளது.*

_'அப்சர்வேசன் மொபைல் ஆப்'_ எனப்படும் இந்த செயலி ஆண்ட்ராய்டு மொபைல்களில் பயன்படுத்தும் வகையில் உள்ளது.

*📲இந்த ஆப் சென்னை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் பரிட்சார்த்த முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.*

*📲தமிழ்நாடு வகுப்பறை நோக்கின் செயலி மூலம் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள ஒவ்வொரு மாணவர்களின் கற்றல் விளைவு அடைவு நிலைகளை முறையாக கண்காணித்து முன்னேற்றம் அடையச்செய்ய எளிமையாக இருக்கும்.*

*📲கற்றலில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு தனிக்கவனம் செலுத்த முடிகிறது என சென்னை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஆய்வு நடத்திய அலுவலர்கள் தெரிவித்துள்ளார். இது ஆசிரியர்கள் அலுவலர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.*

*📲இந்நிலையில் சென்னை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள்     தொடர்ந்து அனைத்து மாவட்டங்களுக்கும் இந்த செயலியின் உபயோகத்தை உடனடியாக கொண்டு செல்ல ஒருங்கி ணைந்த பள்ளி கல்வியின் மாநில திட்ட இயக்ககம் முடிவு செய்துள்ளது.*

*📲இது தொடர்பாக சென்னை, திருவண்ணாமலை தவிர இதர 30 மாவட்டங்களுக்கு இந்த செயலியை பயன்படுத்தும் வகையில் அனைத்து அலுவலர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.*

*📲வட்டாரவளமைய அளவில் கணினி தொழில்நுட்பதில் நன்கு கற்றுத்தெரிந்த மொபைல் போன் நன்றாக பயன்படுத்துகின்ற ஒரு ஆசிரியர் பயிற்றுநர் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்டோருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள் ளது. இந்த பயிற்சி மாநில திட்ட இயக்ககத்தால் அளிக்கப்படுகிறது.*

*📲இதன் தொடர்ச்சியாக மாணவர்களின் வகுப்பறை செயல்பாடுகளை மொபைல் ஆப் மூலம் மாநிலம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் கண்காணிக்கும் பணிகள் விரைவில் தொடங்கும் என்று கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.*

🗝ayaneducationnews.blogspot.com

No comments:

Post a Comment