*கூட்டுறவு வங்கி மற்றும் கடன் சங்கங்களில் கடன் வாங்குபவர்களின் பங்குத்தொகை 10% இருந்து 5% ஆக குறைப்பது சார்ந்து -கூட்டுறவு பதிவாளர் சுற்றறிக்கை -நாள்:03.01.2019*
🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟
⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡
*🎯பணியாளர் கூட்டுறவு கடன் மற்றும் சிக்கன நாணயச் சங்கங்கள் மத்திய கூட்டுறவு வங்கிகளில் கடன் பெறும் போது செலுத்தப்படும் பங்குத் தொகை மற்றும் பணியாளர் கூட்டுறவு கடன் மற்றும் சிக்கன நாணயம் சங்கங்களின் உறுப்பினர்கள் அச்சங்கத்திலிருந்து பெறும் கடன் தொகைக்கு செலுத்தப்படும் பங்குத் தொகை விகிதம் குறைப்பது தொடர்பாக பெறப்பட்ட கோரிக்கைகள் குறித்து கடந்த 06.12.2018 அன்று நடைபெற்ற மத்தியக் கூட்டுறவு வங்கிகளின் மேலாண்மை இயக்குநர்கள் மற்றும் மண்டல இணைப்பதிவாளர்களின் ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.*
*🎯அதனடிப்படையில் இனிவரும் காலங்களில் மத்திய கூட்டுறவு வங்கிகளில் பணியாளர் கூட்டுறவு கடன் மற்றும் சிக்கன நாணய சங்கங்கள் பெறும் கடன் தொகைக்கு 5% பங்குத் தொகை வசூலிக்கவும் அதே போல் பணியாளர் கூட்டுறவு கடன் மற்றும் சிக்கன நாணய சங்கங்களின் உறுப்பினர்கள் அச்சங்கங்களின் மூலம் பெறப்படும் கடன் தொகைக்கு 5% பங்குத் தொகை வசூலிக்கவும் அறிவுறுத்தப்படுகிறது.*
No comments:
Post a Comment