AYAN EDUCATIONA NEWS

Saturday, 28 August 2021

*✍️பள்ளிகள் திறப்பு - தலைமையாசிரியர்களுக்கான சுற்றறிக்கை - பள்ளிக்கல்வித்துறை வெளியீடு:*

*🤝பள்ளிக் கல்வித் துறை பள்ளிக் கல்விமுதன்மைக் செயலாளர் மற்றும் ஆணையர் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற கூட்டம் :*

*📢01.09.2021 முதல் அனைத்துவகைப் பள்ளியைதிறப்பது தொடர்பாக அனைத்துவகைப் பள்ளி தலைமையாசிரியர்கள் / முதல்வர்களுக்கு சுற்றறிக்கை*

*📆வாரத்தில் 6 நாட்கள் பள்ளி வேலைநாட்கள்*

*👨‍🏫10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கு தினமும் வகுப்புகள் நடைபெறும்.*

*😇ஒவ்வொரு வகுப்பறையிலும் 20 மாணாக்கர்கள் மட்டுமேசமூக இடைவெளி பின்பற்றி அமரவைக்க வேண்டும்.*

*😇போதிய இடவசதிஇல்லை எனில் , 9 ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப் பெறவேண்டும்.*

*😇உயர்நிலைப்பள்ளிகளில் 9 - ம் வகுப்பு மற்றும் 10 - ம் வகுப்பு தினமும் செயல்படவேண்டும் , போதிய இடவசதி இல்லாத பள்ளிகளில் மட்டும் 9 - ம் வகுப்பு சுழட்சி முறையில் செயல்படவேண்டும்.*

*📡தனியார் பள்ளிகளில் மட்டும் , பள்ளிக்கு வருகை புரிய இயலாத மாணவர்களுக்கு தொடர்ந்து இணையவழி ( Online Class ) வகுப்புகள் நடத்தப்படவேண்டும்.*

*😷மாணவர்கள் கட்டாயமாக முகக்கவசம் ( Mask ) அணியவேண்டும்.*

*👋மாணவர்கள் வகுப்பறைக்கு செல்லும் முன் கட்டாயமாக கிருமிநாசினி ( Sanitizer ) சோப்புகளைக் கொண்டு கைகளை சுத்தம் செய்யவேண்டும்.*

*🧍‍♀️    🧍‍♂️பள்ளிவளாகத்தில் அனைவரும் SOP தவறாது பின்பற்ற வேண்டும்.*

*💉அனைத்து ஆசிரியரல்லாத பணியாளர்கள் கட்டாயமாக கோவிட் -19 தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.*

*🤷‍♂️பள்ளிக்கு வருகை புரிவதிலிருந்து விலக்கு பெற்ற ஆசிரியர்கள் 01.09.2021 முதல் பள்ளிக்கு தவறாது வருகைபுரிய வேண்டும்.*

*💉கோவிட் -19 தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் கட்டாயமாக சார்ந்த பள்ளித் தலைமையாசிரியரிடம் சமர்ப்பிக்கவேண்டும்.*

*💉கோவிட் -19 கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுவர்கள் 90 நாட்கள் கழித்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.*

*📢கோவிட் -19 தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத ஆசிரியர்கள் , அதற்கான விலக்குகோரும் சான்றினை மாவட்டசுகாதாரத் துறை இணை இயக்குநரிடம் பெற்றுசமர்ப்பிக்க வேண்டும்.*

*🤷‍♂️100 நாள்வேலைவாய்ப்புத்திட்டப் பணியாளர்களைக் கொண்டு பள்ளிவளாகம் மற்றும் வகுப்பறைகள் சுத்தப்படுத்த வேண்டும்.*

*📲EMIS இணையதளத்தில் ஆசிரியர்களின் வருகைப் பதிவு கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.*

*✍️மருத்துவ உதவிமைய எண் மற்றும் அருகிலுள்ள ஆரம்பசுகாதார நிலைய அலைபேசி எண் ( Help Line ) உள்ளிட்டவிவரங்கள் தகவல்பலகையில் மாணவர்கள் / ஆசிரியர்கள் / அலுவலகப் பணியாளர்கள் அனைவரும் தெளிவாக பார்வையிடும் வகையில் இருத்தல் வேண்டும் .*

*📲EMIS விவரங்களை நாள்தோறும் உடனுக்குடன் புதுப்பித்தல் வேண்டும்.*

*🌡️மாணவர்களுக்கு நாள்தோறும் உடல் வெப்பநிலை கண்காணித்து உரிய பதிவேட்டில் பராமரித்தல் வேண்டும்.*

*📲EMIS இணையதளத்தில் தடுப்பூசி செலுத்தியவர்களின் விவரங்கள் தவறாது பதிவேற்றம் செய்திருத்தல் வேண்டும்.*

*📢சமூக இடைவெளியை தவறாது கடைபிக்க வேண்டும்.*

*❌P.E.T. , N.S.S. , N.C.C. , தொடர்பான செயல்பாடுகள் பள்ளிவளாகத்தில் செயல்படுதல் கூடாது.*

*🧍‍♀️       🧍‍♂️மாணவர்களுக்கான சமூக இடைவெளியினை கடைபிடித்து வகுப்பறையில் அமரவைக்க வேண்டும்.*

*🩺தேவைப்படின் RBSK தொடர்புகொண்டு சிறப்பு முகாம் நடத்தி மாணவர்களின் உடல்நிலை | ஆரோக்கியத்தை பரிசோதிக்க வேண்டும்.*

*🛡️மாணவர்களுக்கு தொற்று ஏற்படாதவண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.*

*🏩மாணவர்கள் தங்கும் விடுதிகளில் சமூக இடைவெளி , SOP நடைமுறைகளை பின்பற்றப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.*

*🚌மாணவர்களுக்கான இலவச பேருந்துபயண அட்டை பெற்று வழங்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.*

*💊சத்துமாத்திரைகள் மாணவர்களுக்கு வழங்கப்படும் .*

*📌45 நாட்களுக்கு மாணவர்களுக்கான Bridge Course கற்றல் கற்பித்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.*

*📌கொரோனாபாதிப்புஏற்பட்டநாளிலிருந்து 90 நாட்களுக்குப் பிறகேதடுப்பூசிசெலுத்துவதை உறுதிசெய்யவேண்டும்.*

*📌அவ்வபோது பள்ளிகளை ஆய்வு செய்ய உயர் அலுவலர்கள்வருகைதரஉள்ளதால் , மேற்காணும் அனைத்துதொடர்நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அனைத்துவகைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் / முதல்வர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.*

Saturday, 7 August 2021

Whatsapp இன் மூலம் நீங்கள் Covid -19 தடுப்பூசி செலுத்தியதிற்கான சான்றிதழை pdf வடிவில் பெற்றுக்கொள்ள

Whatsapp இன் மூலம் நீங்கள் Covid -19  தடுப்பூசி செலுத்தியதிற்கான சான்றிதழை  pdf வடிவில் பெற்றுக்கொள்ளலாம்..

1. முதலில்  9013151515 என்ற எண்ணை  உங்கள் மொபைலில் save செய்துகொள்ளுங்கள்.

2. அந்த எண்ணை whatsapp இல்  open செய்து " Download certificate" என்று type செய்து  அனுப்புங்கள்.

3. உடனே உங்கள் மொபைலில்  message inbox  இல் 6 இலக்க OTP வரும்..அதை whatsapp இல்  type செய்து அனுப்புங்கள்.

4. Type  1. for Downloading Cowin vaccination Certificate என்று  message  வரும்...

5.  1  என்ற எண்ணை type செய்து அனுப்பவும்..

உடனே  pdf   வடிவில்  COVID vaccination  certificate   பெற்றுக்கொள்ளலாம்.👍👍👍

Thursday, 8 July 2021

✍️தமிழ் அறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் 15-ந் தேதி கடைசிநாள்

✍️தமிழ் அறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் 15-ந் தேதி கடைசிநாள்

🗣️சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- 

✍️தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் வயது முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் ஒவ்வொரு ஆண்டும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

✍️இத்திட்டத்தின்கீழ் இந்த ஆண்டிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு விண்ணப்பிப்பவர்கள் 58 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும்.

✍️தாலுகா அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் பெறப்பட்ட வருமான சான்று, தமிழ்ப்பணி ஆற்றியமைக்கான ஆதாரங்கள் மற்றும் தமிழ்ப்பணி ஆற்றி வருவதற்கான தகுதிநிலை சான்றிதழ் ஆகியவற்றை விண்ணத்துடன் இணைக்க வேண்டும். 

✍️தேர்வு செய்பவர்களுக்கு ரூ.3 ஆயிரத்து 500 உதவித்தொகை வழங்கப்படும். மேலும் ரூ.500 மருத்துவப்படி அளிக்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் சேலம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மண்டல தமிழ் வளர்ச்சி துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் வருகிற 15-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

💐தமிழக அரசுக்கும், பள்ளிக் கல்வித்துறைக்கும், SCERT க்கும் ஒரு வாழ்த்து சொல்லுங்க!

💐தமிழக அரசுக்கும், பள்ளிக் கல்வித்துறைக்கும், SCERT க்கும் ஒரு வாழ்த்து சொல்லுங்க!

✍️10, 11 & 12-வது வகுப்பு new bookல உள்ள கடினமான, முக்கியமான பகுதிகள் மற்றும் GK எல்லாம் எளிமையா, புரியும் படியா video lessons பண்ணிருக்காங்க. (லிங்க் கடைசியில்)

👏sema work. extraordinary plan. conceptஐ விளக்கி சொல்லியிருக்காங்க.

✍️English, தமிழ் ரெண்டு மொழியிலும் தயாரிக்கப் பட்டிருக்கு.

✍️இந்தாப்பா... இனி ஆயிரக்கணக்குல செலவழிச்சு Tuition அனுப்ப வேண்டாம்.

✍️வாத்தியார் இல்லன்னாலும் சரி, நடத்துனது புரியலனாலும் சரி இத ஒரு அஞ்சு தடவ பார்த்தாவே போதும், தெளிவா புரிஞ்சிரும்.

🔊TN SCERT அப்பிடீங்ற  You Tube Channelல்ல எல்லாமே upload ஆயிருக்கு.

😇இப்ப என்ன பிரச்சனைனா இது பத்தி யாருக்குமே தெரியல.

🗣️Freeyaa கிடைக்கிறதால யாருக்குமே இதன் அருமை தெரியல.

🤝கிராமப்புற, ஏழைப் பிள்ளைங்களுக்கு இந்த விசயம் அதிகமாக போய்ச் சேரவேயில்ல.

👍ஏதாவது நல்லது செய்யனும்னு நினைச்சா இதப் பத்தி மாணவர்களுக்கு சொல்லி நல்லா படிக்க உதவுங்க.

©️What'sApp, Face book media வுல share பட்டன அழுத்துங்க.

📲பிடிச்சதோ, பிரச்சனையோ உடனே share பண்ணுறோம்ல.
அதே போல இதையும் share பண்ணுங்க.

❎இனி பணக்காரர்களுக்கு  மட்டுமல்ல நல்ல கல்வியும், மருத்துவமும், பொறியியலும், உயர் கல்வியும்.

📲ஒவ்வொரு ஏழை மாணவனுக்கும் இதைக் கொண்டு போய்ச் சேர்ப்போம்.

Kindly SHARE to all.🙏🙏🙏🙏🙏


  அரசுப் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும்  இதனை  கொண்டு சேர்ப்போம். நன்றி.

*48000 ரூபாய் தர அரசு ரெடி .…! நீங்க ரெடியா ? கடைசி தேதி செப் 26*

*✍️48000 ரூபாய் தர அரசு ரெடி .…! நீங்க ரெடியா ? கடைசி தேதி செப் 26*

✍️அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு  என்.எம்.எம்.எஸ்  தேர்வை நடத்துகிறது . இதில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு மாதம் 1000 வீதம் ஆண்டுக்கு  12000 என   9, 10, 11, 12 ஆம் வகுப்பு வரை 4 ஆண்டுகள் மொத்தம்  48000 ரூபாய் அரசு நம் வங்கி கணக்கில் பணம் அனுப்பி தரும் . கொஞ்சம் சிரமம் எடுத்து இந்த ஒரு தேர்வை எழுதினால் அந்த பணம் பேருதவியாக இருக்கும்

✍️தேர்வு எழுத விண்ணப்பிக்கும்  கடைசி தேதி 26-09-2021
தேர்வு நடைபெறும் தேதி : 04-11-2021

📲வலைத்தளம்  www.bse.ap.gov.in

📞முழு விவரங்களுக்கு
செல்: 8332977207, 8332977607
 
🧑‍🏫உங்களுக்குத் தெரிந்த 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தச் செய்தியை தெரிவியுங்கள் . ஏழை மாணவர்களுக்கு உதவ உங்கள் பங்கைச் செய்யுங்கள்....

Tuesday, 22 June 2021

*//EMIS IMPORTANT NEWS//*

*//EMIS IMPORTANT NEWS//*

#EMIS

*⚡1. உங்கள் பள்ளி முதல் வகுப்பு மாணவர்களுக்கு புதிதாக பதிவு மேற்கொள்ளும் முன் அந்த மாணவன் வேறு எங்கும் இதற்கு முன் படிக்கவில்லை என்பதை உறுதி செய்து கொள்ளவும்.*

*⚡2. அந்த மாணவன் ஏற்கனவே வேறு அரசு மற்றும் தனியார் பள்ளியில் LKG,UKG படிந்திருந்தால் அந்த மாணவனுக்கு emis id இருக்கும்.*

*⚡3.அந்த மாணவனை emisstudents admission- search செய்து admit செய்து கொள்ளவும்.*

*⚡4.இந்த வருடம் புதிய மாணவர்களை emis தளத்தில் சேர்க்கும் போது student type*

*_1.regular students &_*
 *_2.migrant students என வரும்._*

*⚡5. Regular students என்றால் மாணவன் தமிழ்நாட்டில் வசிப்பவன்.*

*⚡6. Migrant student என்றால் மாணவன் இதற்கு முன் வேறு மாநிலத்தில் படித்துவிட்டு தற்போது தமிழ்நாட்டிற்கு வந்துள்ளான் என அர்த்தம்.*
*_(பெற்றோர்கள் வேலை காரணமாக வேறு மாநிலத்தில் இருந்து இங்கு வந்திருக்கலாம் அல்லது தமிழக பெற்றோர்கள் வேலை காரணமாக இதற்கு முன் வேறு மாநிலத்திலும் தற்போது தம் சொந்த மாநிலத்திற்கு வந்திருக்கலாம்)_*

*⚡7. Migrant student முதல் வகுப்பு மட்டுமின்றி வேறு எந்த வகுப்பாக இருந்தாலும் புதிய பதிவை மேற்கொள்ளலாம்.*

*_அவசரம் வேண்டாம் கவனமாக பதிவு செய்யவும்._*

AYAN SARAVANAN
EMIS CO-ORDINATOR
CHINNASALEM

Tuesday, 8 June 2021

*🗣️14.06.2021 முதல் பள்ளி _தலைமை ஆசிரியர்கள்_ மற்றும் _அலுவலக பணியாளர்கள்_ தினசரி வருகை புரிய வேண்டும் - பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு*

*🗣️14.06.2021 முதல் பள்ளி _தலைமை ஆசிரியர்கள்_ மற்றும் _அலுவலக பணியாளர்கள்_ தினசரி வருகை புரிய வேண்டும் - பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு*

*✍️பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள், சென்னை-6 ந.க.எண். 34462/பிடி1/இ1/2020, நாள்.08.06.2021*

*✍️அரசாணை எண்.613, வருவாய் மேலாண்மைத் துறை நாள்:05.06.2021- ன் படி, நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று காரணமாக மாணவர் நலன் கருதி இந்த ஆண்டு பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வு நடத்தப்படமாட்டாது  என மாண்புமிகு தமிழ்நாடு  முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்குவது, உயர்கல்வி பயிலுவதற்கான சான்றிதழ்கள் வழங்குவது சார்ந்த பணிகள் நடைபெற உள்ளதாலும் மாணவர்கள் சேர்க்கை ஆரம்பிக்கப்பட உள்ளதாலும் மற்றும் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய விலையில்லா பாட புத்தகங்கள் மற்றும் கற்றல் கற்பித்தலுக்கு தேவையான இதர நலத்திட்டங்கள் வழங்க வேண்டி உள்ளதாலும், பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளை சுத்தம் செய்வது சார்ந்தும் மற்றும் மாணவர்கள் கல்வி தொலைக்காட்சி கற்றல் சார்ந்த நிகழ்ச்சிகளை பார்வையிட செய்வது சார்ந்தும், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் (தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை) பணிபுரியும் _தலைமையாசிரியர்கள்_ மற்றும் _அலுவலகப் பணியாளர்கள்_ அனைவரும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை (SOP) பின்பற்றி 14.06.2021 முதல் பணிக்கு வருகை புரிய வேண்டுமென பள்ளிக்கல்வி ஆணையர் அவர்களால் அறிவுறுத்தப்படுகிறது.*