Thursday, 8 July 2021
✍️தமிழ் அறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் 15-ந் தேதி கடைசிநாள்
💐தமிழக அரசுக்கும், பள்ளிக் கல்வித்துறைக்கும், SCERT க்கும் ஒரு வாழ்த்து சொல்லுங்க!
*48000 ரூபாய் தர அரசு ரெடி .…! நீங்க ரெடியா ? கடைசி தேதி செப் 26*
*✍️48000 ரூபாய் தர அரசு ரெடி .…! நீங்க ரெடியா ? கடைசி தேதி செப் 26*
✍️அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு என்.எம்.எம்.எஸ் தேர்வை நடத்துகிறது . இதில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு மாதம் 1000 வீதம் ஆண்டுக்கு 12000 என 9, 10, 11, 12 ஆம் வகுப்பு வரை 4 ஆண்டுகள் மொத்தம் 48000 ரூபாய் அரசு நம் வங்கி கணக்கில் பணம் அனுப்பி தரும் . கொஞ்சம் சிரமம் எடுத்து இந்த ஒரு தேர்வை எழுதினால் அந்த பணம் பேருதவியாக இருக்கும்
✍️தேர்வு எழுத விண்ணப்பிக்கும் கடைசி தேதி 26-09-2021
தேர்வு நடைபெறும் தேதி : 04-11-2021
📲வலைத்தளம் www.bse.ap.gov.in
📞முழு விவரங்களுக்கு
செல்: 8332977207, 8332977607
🧑🏫உங்களுக்குத் தெரிந்த 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தச் செய்தியை தெரிவியுங்கள் . ஏழை மாணவர்களுக்கு உதவ உங்கள் பங்கைச் செய்யுங்கள்....
Tuesday, 22 June 2021
*//EMIS IMPORTANT NEWS//*
Tuesday, 8 June 2021
*🗣️14.06.2021 முதல் பள்ளி _தலைமை ஆசிரியர்கள்_ மற்றும் _அலுவலக பணியாளர்கள்_ தினசரி வருகை புரிய வேண்டும் - பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு*
*🗣️14.06.2021 முதல் பள்ளி _தலைமை ஆசிரியர்கள்_ மற்றும் _அலுவலக பணியாளர்கள்_ தினசரி வருகை புரிய வேண்டும் - பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு*
*✍️பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள், சென்னை-6 ந.க.எண். 34462/பிடி1/இ1/2020, நாள்.08.06.2021*
*✍️அரசாணை எண்.613, வருவாய் மேலாண்மைத் துறை நாள்:05.06.2021- ன் படி, நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று காரணமாக மாணவர் நலன் கருதி இந்த ஆண்டு பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வு நடத்தப்படமாட்டாது என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்குவது, உயர்கல்வி பயிலுவதற்கான சான்றிதழ்கள் வழங்குவது சார்ந்த பணிகள் நடைபெற உள்ளதாலும் மாணவர்கள் சேர்க்கை ஆரம்பிக்கப்பட உள்ளதாலும் மற்றும் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய விலையில்லா பாட புத்தகங்கள் மற்றும் கற்றல் கற்பித்தலுக்கு தேவையான இதர நலத்திட்டங்கள் வழங்க வேண்டி உள்ளதாலும், பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளை சுத்தம் செய்வது சார்ந்தும் மற்றும் மாணவர்கள் கல்வி தொலைக்காட்சி கற்றல் சார்ந்த நிகழ்ச்சிகளை பார்வையிட செய்வது சார்ந்தும், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் (தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை) பணிபுரியும் _தலைமையாசிரியர்கள்_ மற்றும் _அலுவலகப் பணியாளர்கள்_ அனைவரும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை (SOP) பின்பற்றி 14.06.2021 முதல் பணிக்கு வருகை புரிய வேண்டுமென பள்ளிக்கல்வி ஆணையர் அவர்களால் அறிவுறுத்தப்படுகிறது.*
Monday, 17 May 2021
*_🚘தமிழகம் முழுவதும் இன்று (17.05.2021) முதல் மாவட்டத்திற்குள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையே பயணம் செய்ய இ-பதிவு கட்டாயம்:_*
*_🚘தமிழகம் முழுவதும் இன்று (17.05.2021) முதல் மாவட்டத்திற்குள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையே பயணம் செய்ய இ-பதிவு கட்டாயம்:_*
*🚙இ- பதிவு முறை, 'சாப்ட்வேர்' மூலம் இயங்குவதால், விபரங்களை பதிவு செய்தவுடன், உடனுக்குடன் ரசீது வரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.*
*🚘இதனால் நெருங்கிய உறவினர்களின் இறப்பு போன்ற, அவசர தேவைக்காக பயணிப்போர், உடனுக்குடன் விண்ணப்பித்து பதிவு பெறலாம்.*
_பதிவு செய்வது எப்படி?_
*🚗இ - பதிவு முறைக்காக உருவாக்கப்பட்டுள்ள, eregister.tnega.org என்ற இணையதளத்தில் மொபைல் எண்ணை பதிவு செய்து, மொபைல் போன் எண்ணுக்கு வரும், 'ஓ.டி.பி.,'யை பதிவு செய்ய வேண்டும்.*
*🚙பின்னர் வரும் விண்ணப்பத்தில் பயண விபரங்கள், அடையாள அட்டை (ஆதார், ஓட்டுனர் உரிமம்) ஏதாவது ஒன்று, மற்றும் பயணத்திற்கான ஆவணங்கள், வாகனத்தின் எண் போன்றவற்றை, பதிவு செய்ய வேண்டும்.*
*🚘அனைத்து விபரங்களையும் பதிவு செய்தவுடன், அளித்த தகவல்கள் சரிபார்க்கப்பட்டு, உடனுக்குடன் ரசீது வழங்கப்படும்.*
*🚗ரசீதில், வாகனத்தின் எண், பயணி பெயர், பயணத்திற்கான காரணம், இடம் உள்ளிட்ட தகவல் இருக்கும்.*
*🚙இதை பி.டி.எப்., வடிவில் பதிவிறக்கம் செய்து கொண்டு, பயணம் மேற்கொள்ளும்போது போலீசாரிடம் காண்பிக்க வேண்டும்.*
_புகைப்படம்:_
நன்றி THE HINDU BUSINESS
Friday, 15 January 2021
*🙋♂️அரசு ஊழியர்கள் துறைத்தேர்வு எழுத ஆதார் கட்டாயம் TNPSC தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அறிவிப்பு*
*🙋♂️அரசு ஊழியர்கள் துறைத்தேர்வு எழுத ஆதார் கட்டாயம் TNPSC தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அறிவிப்பு*
*⚡அரசு ஊழியர்கள் துறைத்தேர்வுக்கு ஆதார் கட்டாயம்*
_டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் (பொறுப்பு) கே. நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:_
*⚡2020 டிசம்பர் பருவத்துக்குரிய துறைத் தேர்வுகள் பிப்ரவரி 14 முதல் 21-ம் தேதி வரை (சனி, ஞாயிறு உட்பட) நடைபெற உள்ளன.*
*⚡விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வாயிலாக ஜனவரி 29-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.*
*⚡விதிமுறைகள், பாடத்திட்டம், தேர்வு அமைப்பு முறை, தேர்வு மையம், தேர்வு கட்டணம், கால அட்டவணை உள்ளிட்ட விவரங்களை தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) காணலாம்.*
*⚡இந்தத்துறைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது ஆதார் எண்ணை கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.*







