AYAN EDUCATIONA NEWS

AYAN NEWS


Saturday, 18 January 2020

*சத்துணவு திட்டம் நவீனமாகுது! தமிழக அரசின் அடுத்த அதிரடி!*

*சத்துணவு திட்டம் நவீனமாகுது! தமிழக அரசின் அடுத்த அதிரடி!*

🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟
⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡

*🍲சத்துணவுக்கும் இனி பயோ மெட்ரிக்… சாட்டையை சுழற்றும் சமூக நலத்துறை.. தமிழக அரசின் அடுத்தடுத்த அதிரடிகள்… அரசு பள்ளி மாணவர்களுக்கு முறையாக சத்துணவு கிடைப்பதை உறுதி செய்ய பள்ளிகளில் பயோ மெட்ரிக் முறையை அமல்படுத்த சமூகநலத் துறை அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர்.*

*🍲அதிரடி திட்டங்களால் புதுப்பொழிவு பெறப்போகும் அரசு பள்ளிகள்.. தமிழகம் முழுவதும் மொத்தம் 49,554 சத்துணவு மையங்கள் மூலம் தினமும் 49 லட்சத்துக்கும் மேற் பட்ட மாணவ, மாணவியர்கள் பசியாறி பயன் அடைந்து வருகின்றனர்.*

*🍲இவர்களுக்கு மதிய நேரங்களில் வழங்கப்படும் சத்துணவுகள் சரியாக மாணவர்களுக்கு சென்று சேருகிறதா என்பதை கண்டறிய தலைமை ஆசிரியர்கள் மூலம் தினமும் எத்தனை மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது என்பது கணக்கெடுக்கப்பட்டு வந்தது.*

*🍲எனினும் சத்துணவின் பயன் முழுமையாக மாணவர்களுக்கு சென்று சேருவதை அதிகாரிகளால் உறுதிப்படுத்த முடியவில்லை. எனவே, பயோமெட்ரிக் முறையை அமல்படுத்த சமூக நலத்துறை அதிகாரிகள் தற்போது முடிவு செய்துள்ளனர்.*

*🍲முதலில் சோதனை அடிப்படையில் சென்னையில் 10 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு அங்கு சத்துணவு சாப்பிடும் மாணவர்கள் பயோமெட்ரிக் முறையில் கைரேகையை பதிவு செய்து விட்டு பின் சத்துணவை பெற்றுச் செல்லலாம் என்றும், புதிதாக மதிய உணவு சாப்பிட வரும் மாணவர்களுக்கும் உணவு வழங்கப்படும்.*

*🍲யாருக்கும் இதை காரணம் காட்டி உணவு மறுக்கப்படாது. இதற்கான வரவேற்பை பொறுத்து தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர்.*

🗝ayaneducationnews.blogspot.com

No comments:

Post a Comment