AYAN EDUCATIONA NEWS

AYAN NEWS


Wednesday, 18 December 2019

*மாணவர்களின் வருகை குறித்து (SMS) அனுப்ப ஏதுவாக EMIS இணையதளத்தில் மாணவர் விவரங்களைப் உறுதிப்படுத்துதல் சார்ந்து பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்*


🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟
⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡


*📲அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் வருகையை உறுதி படுத்தும் வகையில், மாணவர்கள் பாதுகாப்பாகப் பள்ளிக்கு வருகை புரிந்த தகவலை பெற்றோர்களுக்கு தெரிவிக்கும் வகையில் மாணவர்கள் வருகை குறித்த தகவல் அவர்களுடைய பெற்றோர்களுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.*


*📲இத்திட்டத்தின் படி மாணவ, மாணவியர் வருகை புரியாத நாட்கள் பற்றிய விவரம் மட்டுமின்றி மாணவ/ மாணவியரின் அரசு பொதுத்தேர்வு தேர்ச்சி விவரங்கள், பருவத் தேர்வு தேர்ச்சி விவரங்கள், தேசிய திறனாய்வு தேர்வு, ஊரக திறனாய்வுத் தேர்வு பற்றிய அறிவிப்பு மற்றும் முடிவுகள் மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா நலத் திட்டங்கள், 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ/ மாணவியர் இடைநிற்றலை தவிர்க்கும் பொருட்டு தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனம் மூலம் வழங்கப்படும் ஊக்க உதவித்தொகை பெற விண்ணபித்தல், சுதந்திர தினம், குடியரசு தினம், குழத்தைகள் தினம், பள்ளி ஆண்டு விழா போன்ற விழாக்களுக்கு பெற்றோரை அழைத்தல், உள்ளூர் விடுமுறை பற்றிய தகவல்கள், கோடை விடுமுறைக்குப் பின் பள்ளி திறக்கும் நாள்/ கடைசி வேலை நாள், பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடைபெறுதல் பற்றிய விவரங்கள் பெற்றோரின் கைப்பேசி எண்ணிற்கு அனுப்பப்பட உள்ளது.*


*📲எனவே பள்ளியில் பயிலும் மாணவர்களின் விவரங்கள், பெற்றோரின் விவரங்கள் மற்றும் பெற்றோரின் கைபேசி எண் (Mobile No) ஆகிய விபரங்களை ஏற்கனவே EMIS இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டதை மீள சரிபார்த்து சரி செய்யுமாறும், மேற்படி விவரங்களை இதுநாள் வரை தலைமையாசிரியர்கள் பதிவு செய்யாமல் இருப்பின், உடன் அவ்விபரங்களை பதிவு செய்யுமாறும் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.*


🗝ayaneducationnews.blogspot.com

No comments:

Post a Comment