*சூரிய கண்ணாடி இல்லாமல் பாதுகாப்பாக சூரிய கிரகணத்தை பார்க்கும் முறைகள், சூரிய கிரகணம் மாணவர்களுக்கு நேரடி விழிப்புணர்வு*
🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟
⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡
*👁மோதிர வெளிச்சம் குறைவாகவே இருக்கும், பயம் தேவையில்லை - இயல்பாக இருங்கள், வெறும் கண்ணாலும், பைனாகுலரில் நேரடியாகவும் கிரகணத்தை பார்க்காதீர்கள் - _கல்லூரி மேனாள் முதல்வர் அறிவுரை_*
*🌔🌓🌒தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சூரிய கிரகணம் பார்க்கும் வழிமுறைகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.*
*⚡ஆசிரியை முத்துலட்சுமி வரவேற்றார்.*
*⚡பள்ளி தலைமையாசிரியர் லெ . சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.*
*⚡தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்திரமோகன் மாணவர்களிடம் சூரிய கிரகம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசுகையில்,*
*🌔🌓🌒தமிழ்நாட்டில் அற்புத சூரிய கிரகணம் வரும் டிசம்பர் 26-ம் தேதி வியாழக்கிழமை காலை 8.07 மணி முதல் காலை 11.16 வரை காணமுடியும். அன்றைய தினம் கோவை, ஊட்டி, திருப்பூர், திருச்சி, திண்டுக்கல், காரைக்குடி, புதுக்கோட்டை, சிவகங்கை போன்ற இடங்களில் வானில் ஒரு அதிசய காட்சியைக் காணமுடியும். சூரியன் மிகப்பெரியது. நாம் அதன் அருகில் சென்று பார்க்க முடியாது. பூமி சிறியது, சூரியன் மில்லியன் டிகிரி வெப்பநிலை கொண்டது. சூரியனின் ஆற்றல் தாவரங்கள் மற்றும் மற்ற அனைத்து உயிரினங்களுக்கும் கிடைக்கிறது. தாவரங்கள் மூலம் உணவை உண்டு மனிதர்கள் ஆற்றலைப் பெறுகிறோம். நாம் உயிர் வாழ சூரியன் மிக அவசியம். சூரியனை கடவுளாக அந்தக் காலத்தில் வழிபட்டு வணங்கினர். சூரியனை ஒரு அறிவியல் கண்ணோட்டத்தில் காணவேண்டும்.*
*🌔சூரியன் ,பூமி ,சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது சிறிய சந்திரநானது பெரிய சூரியனை மறைத்து விடுகிறது .கடுகு மாதிரி வந்து தெரிகிறது .அப்போது சில உயிர்கொல்லி வைரஸ் கதிர்கள் பூமியை நோக்கி வந்து நமக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் .பொதுவாக சூரியன் நன்றாக தெரியும் பொழுது அல்ட்ரா கதிர்களின் பாதிப்பு நமக்கு இருக்காது. இது ஒரு அறிவியல் நிகழ்ச்சி .கிரகணம் விடும் போது நமக்கு பகல் இருட்டு போல் தெரியும். சில உயிரினங்களின் நடத்தையில் மாற்றங்கள் ஏற்படும். நாய், பறவைகள், அணில், பூனை இவற்றையெல்லாம் உற்று நோக்கி கவனித்து குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள். அவற்றை பள்ளியில் வந்து சொல்லுங்கள். வெற்றுக் கண்ணால் சூரிய கிரகணத்தை பார்க்க கூடாது.*
*🌓சூரிய கிரகணத்தின்போது மோதிரவிரல் வெளிச்சம் ஏற்படும். ஆனால் இந்த முறை மோதிர வெளிச்சம் மிகக் குறைவாகவே தெரியப்போகிறது. தீ வளையம் போல சூரியன் அற்புதமாக காட்சி தரும். நெருப்பு வளையம் போல காணப்படும் சூரியனை வளைய வடிவ சூரிய கிரகணம் என்கிறோம். சூரியனை எப்பொழுதும் வெறும் கண்களால் பார்க்கக் கூடாது. நுண்துளை கேமரா கொண்டோ அல்லது வேறு விதத்திலோ சூரிய பிம்பத்தை திரையில் வீழ்த்தியோ காண்பதில் எவ்வித ஆபத்தும் இல்லை. வெறும் கண்ணாலும், பைனாகுலரில் நேரடியாகவும் கிரகணத்தை பார்க்க கூடாது. இதற்காக உள்ள சூரிய கண்ணாடிகள் மூலம் மட்டுமே பார்க்க வேண்டும்.நீங்கள் இந்த அற்புதமான காட்சியை பார்த்து உங்கள் பள்ளியில் வந்து சொல்லுங்கள். கொடைக்கானல் அப்சர்வேட்டரி மூலமாக இப்பள்ளியில் மாணவர்களுக்கு கண்ணாடி வழங்கியுள்ளோம் . இந்த கண்ணாடிகளை அணிந்து பார்த்து எங்களுக்கு நீங்கள் முழு தகவலை எடுத்துக் கூறுங்கள் என்று பேசினார். சூரியனை பார்க்கும் கண்ணாடி கொண்டு எவ்வாறு பார்க்கவேண்டும்,பார்த்தால் என்ன தெரிகிறது என்கிற தகவல்களை நேரடி செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. மாணவர்கள் ஜோயல்,கீர்த்தியா ,பாலசிங்கம் ஆகியோர் கேள்விகள் கேட்டு பதில்கள் பெற்றனர் . நிறைவாக ஆசிரியை முத்துமீனாள் நன்றி கூறினார்.*
*🌒தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சூரிய கிரகணம் பார்ப்பது எவ்வாறு என்பதையும், சூரிய கிரகணம் பாதிப்பு இல்லாமல் பார்ப்பதற்கான கண்ணாடிகளையும் தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி மேனாள் முதல்வர் சந்திரமோகன் வழங்கினார். தலைமையாசிரியர் சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.*
*⚡சூரிய கிரகணம் மாணவர்களுக்கு நேரடி விழிப்புணர்வு - வீடியோ*
👇👇👇👇👇👇👇👇 https://www.youtube.com/watch?v=bASGqW6oo6w
*⚡சூரிய கிரகணத்தை பார்க்கும் முறைகள் குறித்து விளக்கும் மாணவர் - வீடியோ*
👇👇👇👇👇👇👇👇
https://www.youtube.com/watch?v=V5i-turBly0
*⚡சூரிய கண்ணாடி இல்லாமல் பாதுகாப்பாக எப்படி சூரிய கிரகணத்தை பார்ப்பது ? நேரடி செயல் விளக்கம் - வீடியோ*
👇👇👇👇👇👇👇👇 https://www.youtube.com/watch?v=ttbqr6IhnUo
🗝ayaneducationnews.blogspot.com
No comments:
Post a Comment