AYAN EDUCATIONA NEWS

Wednesday, 18 November 2020

*🛡️ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி 2020-21 ஆம் கல்வியாண்டில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் PAB -ல் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பள்ளி மானியத்தொகையை விடுவித்தல் மற்றும் அறிவுரைகள் வழங்குதல் சார்பான மாநில திட்ட இயக்குநர் அவர்களின் செயல்முறைக் கடிதம்*

*🛡️ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி 2020-21 ஆம் கல்வியாண்டில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் PAB -ல் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பள்ளி மானியத்தொகையை விடுவித்தல் மற்றும் அறிவுரைகள் வழங்குதல் சார்பான மாநில திட்ட இயக்குநர் அவர்களின் செயல்முறைக் கடிதம்*

*🌟2018-19 ஆம் ஆண்டு UDISE தரவின் அடிப்படையில் திட்ட ஒப்புதல் குழு அறிக்கையில் சில தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு பெறப்படவில்லை. ஆனால் அப்பள்ளிகளுக்கும் பள்ளி மானியம் வழங்குவது அவசியமாகிறது.*

*🌟எனவே மாவட்டங்களுக்கேற்ப மாணவர்களின் எண்ணிக்கை வரம்பு விளிம்பில் உள்ள பள்ளிகளின் எண்ணிக்கை மாற்றி அமைக்கப்பட்டு மாவட்டங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள தொகைக்கு மிகாமல் மாவட்ட வாரியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.*

*🌟அனுமதிக்கப்படும் தொகையினை மாவட்டத்திலுள்ளஅனைத்து அரசு/ நகராட்சி/மாநகராட்சி/நலத்துறை/ தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளுக்கு வழங்கிடும் வகையில் சார்ந்த மாவட்ட திட்ட அலுவலக வங்கி கணக்கில் செலுத்தப்படும். இத்தொகையினை சம்பந்தப்பட்ட பள்ளி மேலாண்மை குழு வங்கி கணக்கிற்கு 5 நாள்களுக்குள் அனுப்பிட வேண்டும். அதன் விவரத்தினை படிவம் 1-ல் பூர்த்தி செய்து மாநில திட்ட இயக்ககத்திற்கு அனுப்பப்பட வேண்டும்.*

*🌟பள்ளி மானியத்தினை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி வழிகாட்டுதல் (Frame work for implementation of Samagra Shiksha) வழிமுறைகளின் படி (Norms) கீழ்க்கண்டவாறு செலவினம் மேற்கொள்ள வேண்டும்.*

_தற்பொழுது காணப்படும் கோவிட் -19 சூழ்நிலைகளை சமாளிக்க திட்ட ஏற்பளிப்பு குழுவின் கூட்ட அறிக்கை பக்கம் 13-ல் பள்ளி மானிய தொகையில் முன்னுரிமை அடிப்படையில் செலவு செய்யப்பட வேண்டியவைகள் பின்வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது:_

*⚡மாணவ மாணவிகளுக்கு தனித்தனியாக கை கழுவும் வசதி (Hand washing facility) மற்றும் பாதுகாப்பான குடிநீர் வழங்கிட வேண்டும்.*

*⚡பள்ளி வளாகத்தில் சோப்பு மற்றும் Hand Sanitizer, கிருமி நாசினி, துப்புரவு செய்ய பயன்படும் பொருள்கள் போன்ற அத்தியாவசிய பொருள்கள் தேவையான அளவில் இருப்பில் உள்ளதை உறுதி செய்ய வேண்டும்.*

*⚡பள்ளி வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்திகரிப்பு பணி தொடர்ந்து நடைபெற வேண்டும்.*

*⚡பள்ளிகளுக்கு தேவையான வெப்ப அளவீட்டுக் கருவியினை (Thermal screening) வாங்குவதற்கு பள்ளி மானியத்திலிருந்து செலவினம் மேற்கொள்ளலாம்.*

*🌟மேலும் 2018-19-ஆம் கல்வியாண்டிலிருந்து பள்ளிகளுக்கு வழங்கப்படும் பள்ளி மானியத்தில் குறைந்த பட்சம் 10% சதவிதம் முழுச் சுகாதார திட்டத்திற்குப் (Swachhta Action Plan) பயன்படுத்தப்பட்டு வருகிறது.*

_மாணவர் எண்ணிக்கை - அலகு தொகை - முழுச் சுகாதார திட்டத்திற்கு பயன்படுத்த வேண்டிய குறைந்தபட்சத் தொகை_

*👉1-15 மாணவர் எண்ணிக்கை - ரூ.12500 - ரூ.1250*

*👉16-100 மாணவர் எண்ணிக்கை - ரூ.25000 - ரூ.2500*

*👉100-250 மாணவர் எண்ணிக்கை - ரூ.50000 - ரூ.5000*

*👉250-1000 மாணவர எண்ணிக்கை - ரூ.75000 - ரூ.7500*

*👉1000-க்கு மேல் மாணவர் எண்ணிக்கை - ரூ.100000 - ரூ.10000*

*✍️மாணவர்கள் கை கழுவும் வசதிக்கு முக்கியத்துவம் அளித்து பள்ளி வளர்ச்சி மேலாண்மைக் குழு தேவையின் அடிப்படையில் முடிவு செய்து அதற்கான தொகையினை முழு சுகாதார திட்டத்திலிருந்து பயன்படுத்த வேண்டும்.*

*✍️பள்ளிகள் திறப்பின் போது மாணவர்கள் கல்வி கற்க உகந்த சூழலை வழங்கும் விதமாக அரசு பள்ளிக் கட்டிடங்களின் உள்கட்டமைப்பு வசதிகளான கை கழுவும் மேடை, சுத்தமான குடிநீர், மின்சார வசதி, கழிவறை ஆகியவற்றினை சமுதாய பங்களிப்புடன் பராமரிக்கும் மற்றும் பழுதுபார்க்கும் பணிகளுக்கு முன்னுரிமை வழங்கி இந்நிதியை பயன்படுத்த வேண்டும்.*

*✍️பள்ளிகளில் இயங்கா நிலையில் உள்ள கற்றல் உபகரணங்களை மாற்றவும், பள்ளியில் ஏற்படும் சிறு தொடர் செலவினங்களான விளையாட்டு உபகரணங்கள், நாளிதழ்கள், மின்கட்டணம், இணையதள வசதி, குடிநீர், கற்றல் கற்பித்தல் பொருள்கள், போன்றவற்றிற்கு இந்நிதியை பயன்படுத்த வேண்டும்.*

*🌟பள்ளி மேலாண்மை குழு வழியாக (SMC) செலவிடுவதற்கான நெறிமுறைகள் பள்ளி மானியம் பெறப்பட்டவுடன் ஒருங்கிணைந்த பள்ளி மானியப் பதிவேட்டில் (வ.எண், பெற்ற தொகை, வங்கி பெயர் மற்றும் நாள்) ஆகியவற்றை தலைமையாசிரியர் பதிவு செய்தல் வேண்டும்.*

*⚡மேற்கூறிய இனங்களில் தேவையான பொருட்களை வாங்குவதற்கு அவசியமான பொருட்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு அப்பொருட்களை பட்டியலிட வேண்டும். பட்டியலிடப்பட்ட பொருட்கள் பள்ளி மேலாண்மைக் குழுவின் தீர்மானத்தின்படி தரமான பொருட்களாக மட்டுமே வாங்கப்பட வேண்டும்.*

*⚡ஒரு செலவினம் ரூ.25,000/-க்கு மேல் மிகுந்தால் சமக்ர சிக்க்ஷா நிதி மேலாண்மை மற்றும் கொள்முதல் கையேடு 2018 (Financial Management and Procurement Manual) அறிவுரையின்படி கொள்முதல் விதிகளைப் பின்பற்றி பள்ளி மேலாண்மைக் குழு அளவிலேயே கொள்முதல் செய்யப்பட வேண்டும்.*

*⚡General Financial Rules (GFR) 145,146 படி உரிய சான்றிதழில் தலைமையாசிரியர் /கொள்முதல் குழுவினர் கையொப்பமிட்டு Procurement file-ல் இணைக்க வேண்டும்.*

*⚡கோவிட்-19 சூழ்நிலைகளை சமாளிக்க தேவையான கிருமிநாசினியை நுகர்பொருள் (Consumable) பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம்.*

*⚡31.12.2020 டிசம்பர் 2020 - க்குள் பள்ளிகளுக்கு தேவையான பொருள்கள் கொள்முதல் செய்யப்பட்டிருக்க வேண்டும்.*

*⚡பள்ளி திறந்தவுடன் 15 நாள்களுக்கு மிகாமல் கட்டிட பழுதுப்பார்க்கும் பணிகள் நிறைவு செய்யப்பட வேண்டும்.*

*⚡நிதி ஆண்டு இறுதியில் ரொக்கக் கணக்குப் புத்தகம் இறுதி இருப்பு ஆகியவை கணக்காளரால் சரிபார்க்கப்பட்டு தலைமையாசிரியர் கையொப்பமிட வேண்டும்.*

*⚡பள்ளி மானியத்தில் வாங்கப்பட்ட பொருள்களின் செலவு விவரத்தினை EMIS ல் பதிவு செய்ய வேண்டும்.*

*⚡ஒவ்வொரு மாதமும் பள்ளி மேலாண்மைக்குழு கணக்கர் பள்ளி பார்வையின் போது அப்பள்ளிக்கு வழங்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பள்ளி மானியத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட வரவு செலவு கணக்குகளைரொக்கப் பதிவேட்டில் பதிவு செய்வதற்கு ஏதுவாக பள்ளி தலைமை ஆசிரியர்கள் வங்கி கணக்கு புத்தகம், ரொக்க பதிவேடு மற்றும் செலவு மேற்கொண்டதற்கான பற்று சீட்டுகளை பள்ளி மேலாண்மைக்குழு கணக்கரிடம் ஒத்திசைவு செய்ய வேண்டும்.*

*⚡பள்ளி மானியத் தொகை (School Grant) முறையாக செலவிடப்பட்டுள்ளதை உறுதி செய்து பயன்பாட்டுச் சான்றிதழ் (Utilization Certificate - படிவம் -1) மாவட்ட திட்ட அலுவலகத்திற்கு 31.03.2021-க்குள் அனுப்பி வைத்தல் வேண்டும்.*

_மாவட்ட அலுவலர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:_

*⚡முதன்மைக் கல்வி அலுவலர், உதவி திட்ட அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் பள்ளி பார்வையின் போது மானியம் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டதையும், பொருள்கள் வாங்கப்பட்டுள்ளதையும், அதற்கான பற்றுச் சீட்டுகள், ரொக்கப் பதிவேடு மற்றும் இருப்புப் பதிவேடு ஆகியவற்றை கண்காணிக்க வேண்டும்.*

*⚡பள்ளி திறந்தவுடன் பள்ளிகளுக்கு தேவையான பொருள்கள் கொள்முதல் செய்யப்பட்டதை உறுதி செய்ய வேண்டும். பள்ளி திறந்தவுடன் சிறு சிறு பழுதுப்பார்க்கும் பணிகள் நிறைவு செய்யப்பட்டதை உறுதி செய்ய வேண்டும்.*

*⚡முதன்மைக் கல்வி அலுவலர் ஒவ்வொரு வாரமும் மீளாய்வு கூட்டத்தில் (Review meeting) பள்ளி மானிய செயல்பாட்டு அறிக்கையை ஆய்வு செய்திடல் (படிவம்- 2 மற்றும் 3) வேண்டும்.*

*⚡ஒவ்வொரு பள்ளியும் பள்ளி மானியத்தில் வாங்கப்பட்ட பொருள்களின் செலவு விவரத்தினை EMIS ல் பதிவு செய்ததை உறுதி செய்ய வேண்டும்.*

*⚡உதவி மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளர், கல்வி மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், பள்ளி மானியத் தொகை (School Grant) முறையாக செலவிடப்பட்டுள்ளதை உறுதி செய்து பள்ளி வாரியாக பயன்பாட்டுச் சான்றிதழ் (Utilization Certificate) பெற்று மாவட்டத்திற்கான பயன்பாட்டுச் சான்றிதழ்களை  31.03.2021-க்குள் மாநில திட்ட இயக்ககத்திற்கு அனுப்பி வைத்தல் வேண்டும்.*

*⚡கள ஆய்வு செய்யும் போது இதனை ஆய்வு செய்ய வேண்டும். பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு இப்பொருள் குறித்து உரிய விவரங்களைத்தெரிவித்து ஒப்புதல் பெறவேண்டும் என்று மாநில திட்ட இயக்குநர் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.*

Tuesday, 17 November 2020

*🌟சட்டப்பேரவைத் தேர்தல் - 2021 - தேர்தல் பணி ஒதுக்கீடு செய்யும் பணிகள் துவக்கம்*

*🌟சட்டப்பேரவைத் தேர்தல் - 2021 - தேர்தல் பணி ஒதுக்கீடு செய்யும் பணிகள் துவக்கம்*

*🌟தமிழ்நாடு மாநில சட்டப்பேரவைத் தேர்தல் - 2021 - அரசுப் பணியாளர்களுக்கான தேர்தல் பணி ஒதுக்கீடு செய்யும் பணிகள் துவக்கம்*

*🌟அரசுப் பணியாளர்களின் விபரங்கள் கோரி  மாவட்ட ஆட்சியர் / தேர்தல் நடத்தும் அலுவலர் உத்தரவு*

*🌟ஆசிரியர்களுக்கு 5 நாட்கள் online பயிற்சி - SPD Proceedings*

*🌟ஆசிரியர்களுக்கு 5 நாட்கள் online பயிற்சி - SPD Proceedings*

*🌟ஆசிரியர்களுக்கு 5 நாட்கள் online பயிற்சி - SPD - SS- List of teachers for online training on teacher development programme on ICT facilities- Level 1 - reg*

Monday, 16 November 2020

*🌟அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் கோவிட் 19 விழிப்புணர்வு சார்ந்து ஒரு நாள் பயிற்சி*

*🌟அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் கோவிட் 19 விழிப்புணர்வு சார்ந்து ஒரு நாள் பயிற்சி*

*🌟அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும்- பள்ளிகளில் மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு & கோவிட் 19 விழிப்புணர்வு சார்ந்து ஒரு நாள் பயிற்சி :*

*_பள்ளிகள் மேற்கொள்ள வேண்டியவை ( பள்ளி திறப்பதற்கு முன் ) :_*

*🛡️1. பள்ளிகளுக்கு நிதி விடுவிக்கப்பட்டவுடன் தலைமை ஆசிரியர்கள் SMC / SMDC உறுப்பினர்களின் கூட்டத்தைக் கூட்டி பள்ளிகளையும் வகுப்பறைகளையும் மற்றும் மாணவர்களின் கைகளை கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்தும் பணிக்குத் தேவையான கொள்முதல் செய்ய வேண்டிய பொருள்கள் எவை என்பதையும் அதன் அளவினையும் முடிவு செய்து தீர்மானம் இயற்ற வேண்டும் .*

*🛡️2. தீர்மானத்தின் அடிப்படையில் பொருள்களை விதிமுறைகளை பின்பற்றிக் கொள்முதல் செய்து அவற்றை பள்ளி இருப்புப் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்.*

*_பள்ளிகள் திறந்த பின் :_*

*⚡1. பள்ளிகள் திறந்த பிறகு , கோவிட் 19 கிருமியின் காரணமாக நோய்த் தொற்று பரவும் அசாதாரணமான சூழலில் , நோய்த் தொற்று பரவாமல் இருக்கத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும்.*

*⚡2. மேலும் அனைத்து அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் " பள்ளிகளில் மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு " சார்ந்து குறிப்பாக கோவிட் - 19 நோய்த் தொற்று பற்றிய விழிப்புணர்வு சார்ந்து ஒருநாள் பயிற்சியும் அதற்கான பயிற்சி கட்டகமும் வழங்கப்பட உள்ளது . அது குறித்த விரிவான விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும்.*

*⚡3. பயிற்சி முடிந்தவுடன் மேற்காண் பொருள் சார்ந்த விழிப்புணர்வை மாணவர்கள் , அவர்களின் பெற்றோர் ஆகியோரிடம் கொண்டு சேர்த்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.*

*⚡4. கோவிட் - 19 குறித்து அரசின் சுகாதாரத்துறை வாயிலாக வழங்கப்படும் வழிக்காட்டு நெறிமுறைகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும்.*


Tuesday, 14 July 2020

*UTA - FREE ONLINE WORKSHOP ON CREATING ANDROID App*

*UTA - FREE ONLINE WORKSHOP ON CREATING ANDROID App*

*UNIVERSAL TEACHERS ACADEMY, Puducherry, India Organised 5 days FREE ONLINE WORKSHOP ON CREATING ANDROID App*

*DATE:*
16- 20 JULY 2020

*_NO CODING REQUIRED_*

*⚡ENCLISH VERSION 2 PM | TAMIL VERSION ®4 PM*

*📲SCAN THE QR CODE TO REGISTER*

*⚡GADGET:*
LAPTOP/ PC
ANDROID MOBILE
HEAD SET

*⚡TARGET GROUP:*
TEACHERS
EDUCATORS
TRAINEE TEACHERS

_WORKSHOP SCHEDULE:_

*⚡16 JULY 2020 INTRODUCTION OF ANDROID APP*

*⚡17 JULY 2020 CREATION OF ANDROID APP-1*

*⚡18 JULY 2020 CREATION OF ANDROID APP - II*

*⚡19 JULY 2020 CREATION OF ANDROID APp - III*

*⚡20 JULY 2020 UPLOADING ANDROID APP IN PLAYSTORE*

*🖥️👁️WATCH US LIVE YouTube, Zoom*

*🏆E-CERTIFICATE WILL BE PROVIDED*

*📲PHASE-8 REGISTRATION FORM*
👇👇👇👇👇👇👇👇

https://docs.google.com/forms/d/e/1FAIpQLScS0kF1wWBEMODGawceHbShSTLZrURBRmdqIvx5b-I1ChiMQw/viewform?usp=send_form

*_CREATION OF ANDROID APPS_*

*⚡5 DAYS FREE ONLINE WORKSHOP FOR TEACHERS, EDUCTORS ALSO STUDENTS*

16-20 JUL 2020

*📲Contact:*
9841049322
9360285488
www.utaindia.blogspot.com

Regards,
*_UTA_*

Wednesday, 8 July 2020

*🖋️12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு தேர்வு தேதி இன்று மாலை அறிவிக்கப்படும்*

*🖋️12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு தேர்வு தேதி இன்று மாலை அறிவிக்கப்படும்*

*தேர்வு எழுதிய 3 நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்*

*🚆🏔12ம் வகுப்பு கடைசி தேர்வு எழுதாத மாணவர்கள் தேர்வு தேதி குறித்து இன்று மாலைக்குள் முதல்வர் அறிவிப்பார்*

*34482 மாணவா்கள் கடைசி தோ்வு எழுதவில்லை; அதில் 718 பேர் மட்டுமே தோ்வெழுத விருப்பம் தெரிவித்துள்ளனர்; இவர்களுக்கு தேர்வு முடிந்த பின் தேர்வு முடிவு வெளியாகும் - அமைச்சர் செங்கோட்டையன்*

*அரசுப் பள்ளிகளில் வரும் 13ஆம் தேதி முதல் ஆன்லைன் கல்வி முறை தொடங்கப்படும்*

*அரசுப் பள்ளிகளில் வரும் 13ஆம் தேதி முதல் ஆன்லைன் கல்வி முறை தொடங்கப்படும்*

*💢தனியார் பள்ளிகள் போன்று அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைனில் பாடம் கற்பிக்கும் திட்டம்; வரும் 13ம் தேதி முதல் தொடக்கம் : அமைச்சர் செங்கோட்டையன்*


*♦♦கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் திறக்கப்படாமல் இருக்கின்றன. இதனால், மாணவர்களுக்குக் கல்வி கற்பிக்க முடியாத நிலை இருந்து வருகிறது.*

 *♦♦தனியார் பள்ளிகளில் ஆன்லைன் மூலம் பாடம் கற்பிக்கப்பட்டு வரும் நிலையில், அரசுப் பள்ளிகளிலும் ஆன்லைன் கல்வி முறை தொடங்கப்பட இருக்கிறது.*

*♦♦தனியார் பள்ளிகள் போன்று அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைனில் பாடம் கற்பிக்கப்படும்*
*என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.*

*♦♦அரசுப் பள்ளிகளில் வரும் 13ஆம் தேதி முதல் ஆன்லைன் கல்வி முறை தொடங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.*

*⭕⭕இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:-*

*♦♦அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பை வரும் 13ம் தேதி முதல்வர் பழனிசாமி தொடங்கி வைப்பார்.*

*♦♦பாடப்புத்தகங்களை வழங்கியவுடன் ஆன்லைன் கல்வி திட்டம் செயல்பாட்டிற்கு வரும்.*

*♦♦அரசு பள்ளி மாணவர்களுக்கு தொலைக்காட்சி வாயிலாகவும் பாடம் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.*

 *♦♦ஒவ்வொரு பாடத்திற்கும் ஒரு சேனல் என்று 5 பாடங்களையும் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.*

*♦♦பொதிகை, கல்வி தொலைக்காட்சி, தனியார் தொலைக்காட்சிகளில் வரும் 13-ம் தேதி முதல் கால அட்டவணை அடிப்படையில் பாடங்கள் ஒளிபரப்பப்படும் என்று கூறிய அவர், கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.*

*♦♦மாவட்டம் தோறும் காலாண்டு, அரையாண்டு தேர்வு எழுதாத 10ம் வகுப்பு மாணவர்கள் என மாவட்டத்திற்கு சிலர் கண்டறியப்பட்டுள்ளனர்.*

*♦♦அவர்களுக்கு தேர்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.*

*♦♦12ம் வகுப்பு பொதுத் தேர்வில் கலந்து கொள்ளாத மாணவர்கள் தேர்வெழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.*

*♦♦விடுபட்ட மாணவர்களுக்கான தேர்வு தேதியை முதல்வர் இன்று மாலை வெளியிடுவார்.*

*♦♦பிளஸ் 2 மாணவர்கள் 34,482 பேர் கடைசி தேர்வை எழுதவில்லை.*

 *♦♦அதில் 718 மாணவர்கள் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்துள்ளனர்.*

*♦♦தேர்வு முடிந்த 4 நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.*

 *♦♦பிளஸ் 1,பிளஸ் 2 பாடத் திட்டம் கடந்த ஆண்டு இருந்ததே தொடரும். என்றார்.*