*அரசுப் பள்ளிகளில் வரும் 13ஆம் தேதி முதல் ஆன்லைன் கல்வி முறை தொடங்கப்படும்*
*💢தனியார் பள்ளிகள் போன்று அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைனில் பாடம் கற்பிக்கும் திட்டம்; வரும் 13ம் தேதி முதல் தொடக்கம் : அமைச்சர் செங்கோட்டையன்*
*♦♦கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் திறக்கப்படாமல் இருக்கின்றன. இதனால், மாணவர்களுக்குக் கல்வி கற்பிக்க முடியாத நிலை இருந்து வருகிறது.*
*♦♦தனியார் பள்ளிகளில் ஆன்லைன் மூலம் பாடம் கற்பிக்கப்பட்டு வரும் நிலையில், அரசுப் பள்ளிகளிலும் ஆன்லைன் கல்வி முறை தொடங்கப்பட இருக்கிறது.*
*♦♦தனியார் பள்ளிகள் போன்று அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைனில் பாடம் கற்பிக்கப்படும்*
*என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.*
*♦♦அரசுப் பள்ளிகளில் வரும் 13ஆம் தேதி முதல் ஆன்லைன் கல்வி முறை தொடங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.*
*⭕⭕இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:-*
*♦♦அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பை வரும் 13ம் தேதி முதல்வர் பழனிசாமி தொடங்கி வைப்பார்.*
*♦♦பாடப்புத்தகங்களை வழங்கியவுடன் ஆன்லைன் கல்வி திட்டம் செயல்பாட்டிற்கு வரும்.*
*♦♦அரசு பள்ளி மாணவர்களுக்கு தொலைக்காட்சி வாயிலாகவும் பாடம் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.*
*♦♦ஒவ்வொரு பாடத்திற்கும் ஒரு சேனல் என்று 5 பாடங்களையும் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.*
*♦♦பொதிகை, கல்வி தொலைக்காட்சி, தனியார் தொலைக்காட்சிகளில் வரும் 13-ம் தேதி முதல் கால அட்டவணை அடிப்படையில் பாடங்கள் ஒளிபரப்பப்படும் என்று கூறிய அவர், கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.*
*♦♦மாவட்டம் தோறும் காலாண்டு, அரையாண்டு தேர்வு எழுதாத 10ம் வகுப்பு மாணவர்கள் என மாவட்டத்திற்கு சிலர் கண்டறியப்பட்டுள்ளனர்.*
*♦♦அவர்களுக்கு தேர்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.*
*♦♦12ம் வகுப்பு பொதுத் தேர்வில் கலந்து கொள்ளாத மாணவர்கள் தேர்வெழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.*
*♦♦விடுபட்ட மாணவர்களுக்கான தேர்வு தேதியை முதல்வர் இன்று மாலை வெளியிடுவார்.*
*♦♦பிளஸ் 2 மாணவர்கள் 34,482 பேர் கடைசி தேர்வை எழுதவில்லை.*
*♦♦அதில் 718 மாணவர்கள் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்துள்ளனர்.*
*♦♦தேர்வு முடிந்த 4 நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.*
*♦♦பிளஸ் 1,பிளஸ் 2 பாடத் திட்டம் கடந்த ஆண்டு இருந்ததே தொடரும். என்றார்.*
No comments:
Post a Comment