AYAN EDUCATIONA NEWS

Saturday, 29 February 2020

*ஒழுங்கு நடவடிக்கையில் தண்டனை பெற்றால் ஆசிரியர்களுக்கு 5 ஆண்டு முன்னுரிமை பட்டியலில் இடம் இல்லை - தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு.*

*ஒழுங்கு நடவடிக்கையில் தண்டனை பெற்றால் ஆசிரியர்களுக்கு 5 ஆண்டு முன்னுரிமை பட்டியலில் இடம் இல்லை - தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு.*

🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟
⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡

*🎯ஒழுங்கு நடவடிக்கையில் தண்டனை வழங்கப்பட்டிருந்தால் அந்த ஆசிரியர்களை 5 ஆண்டு காலத்திற்கு முன்னுரிமை பட்டியலில் சேர்க்க கூடாது என்று தொடக்க கல்வி இயக்கு நர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.*

*🎯தமிழகத்தில் தொடக்க கல்வி, ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு பள்ளி ஆசிரியர்கள் 1.1.2020 நிலவரப்படி பதவி உயர்வுக்கு தகுதியான தேர்ந்தோர் பட்டியல் தயாரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கி தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு பிறப்பித்துளார்.*

_இதுதொடர்பான உத்தரவில் கூறியிருப்பதா வது:_

*🎯அனைத்து வகை ஆசிரியர்களுக்கு தேர்ந்தோர் பட்டியல் வட்டார கல்வி அலுவலரால் தயாரிக்கப்பட்டு அந்தந்த கல்வி மாவட்ட அளவில் இரண்டு ஒன்றியங்களுக்கு ஒருவட்டார கல்வி அலுவலர், ஒரு கண்காணிப்பாளர் மற்றும் ஒரு உதவியாளர் ஆகியோர் கொண்ட குழு அமைத்து கல்வி மாவட்ட தலைமையிடத்தில் முகாம் அமைத்து சரி பார்த்து மாவட்ட கல்வி அலுவலரால் ஒப்பளிக்க வேண்டும். அதனை வட்டார கல்வி அலுவலர் அறிவிப்பு பலகையில் வெளியிட்டு அனைத்து ஆசிரியர்களிடமும் ஒப்புகை பெறவேண்டும்.*

*🎯தமிழ் நாடு குடிமுறைப் பணி ஒழுங்குமுறையும் மேல் முறையீடும் விதிகள் கீழ் ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் இருந்தால் முன்னுரிமை பட்டியலில் சேர்க்க கூடாது.*

*🎯ஒழுங்கு நடவடிக்கையில் கண்டனம், தண்டனை தவிர்த்து பிற தண்டனைகள் வழங்கப்பட்டிருந்தால் 5 ஆண்டு காலத்திற்கு முன்னுரிமை பட்டியலில் சேர்க்கக் கூடாது.*

*🎯அனைத்து வகை ஆசிரியர்களின் தேர்ந்தோர் பட்டியல் தயார் செய்யும் போது பதவி உயர்வுக்கு தேவையான கல்வித்தகுதி அல்லது அதற்கு இணையான கல்வி தகுதி ஆகியவை உரிய காலக்கெடுவிற்குள் பெற்றுள்ளார் களா என்பதை உறுதி செய்து கொண்டு பதவி உயர்வுக்கான தேர்ந்தோர் பட்டியல் தயார் செய்ய அனைத்து வட்டார கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.*

*🎯இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.*

🗝ayaneducationnews.blogspot.com

*வட்டாரக் கல்வி அலுவலர் பதவி உயர்விற்கு தகுதிவாய்ந்த நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களை மாநில அளவில் முன்னுரிமைப் பட்டியல் தயார் செய்திட தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்கள் செயல்முறைக் கடிதம் வெளியிட்டுள்ளார்.*

*வட்டாரக் கல்வி அலுவலர் பதவி உயர்விற்கு தகுதிவாய்ந்த நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களை மாநில அளவில் முன்னுரிமைப் பட்டியல் தயார் செய்திட  தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்கள் செயல்முறைக் கடிதம் வெளியிட்டுள்ளார்.*

🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟
⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡

*🎯தமிழ்நாடு தொடக்கக்கல்வி சார்நிலைப் பணி வட்டார கல்வி அலுவலர் பணியிடத்தினை பதவி உயர்வு மூலம் நியமனம் - 2020 ஆம் ஆண்டு 01.01.2020 நிலவரப்படி மாநில அளவில் முன்னுரிமைப் பட்டியல் (seniority list) தயார் செய்தல் - வட்டார கல்வி அலுவலர் பணிக்கு நிர்ணயிக்கப்பட்ட 4 தேர்வுகளிலும் முறையாக தேர்ச்சி பெற்று 31.12.2011 க்கு முன்னர் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியராக பணியில் சேர்ந்து 31.12.2019 க்குள் முழு தகுதி பெற்ற அரசு/ நகராட்சி/ ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியரின் விபரங்களை அனுப்பக் கோரி தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்கள் செயல்முறைக் கடிதம் வெளியிட்டுள்ளார்.*

🗝ayaneducationnews.blogspot.com

*1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் கற்றல் செயல்பாடுகளை கண்காணிக்க மொபைல் ஆப் - தமிழகம் முழுவதும் செயல்படுத்த திட்டம்.*

*1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் கற்றல் செயல்பாடுகளை கண்காணிக்க மொபைல் ஆப் - தமிழகம் முழுவதும் செயல்படுத்த திட்டம்.*

🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟
⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡

*📲ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை வகுப்பறையில் மாணவர்களின் கற்றல் செயல்பாடுகளை கண்காணிக்க மொபைல் ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் இதனை தமிழகம் முழுவதும் செயல்படுத்த கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.*

*🎯தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்கள் வகுப்பறைகளில் எவ்வாறு கவனம் செலுத்துகிறார்கள் என்பதை கண்காணிக்க கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.*

*📲இதில் ஆசிரியர்கள் பாடம் போதிக்கும்போது அது எவ்வாறு மாணவர்களை சென்றடைந்துள்ளது என்ற கற்றல் விளைவு அடைவு நிலைகள் கண்காணிக்கப்ப டுகிறது.*

*📲இதன் ஒரு பகுதியாக வகுப்பறை கற்றல்-கற்பித்தல் நிகழ்வுகளை உற்று நோக்கி கற்றல் கற்பித்தல் நிகழ்வுகளை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.*

*📲மேலும் அறிவியல் தொழில்நுட்ப சாதனங்களை பயன்படுத்தி பள்ளி கல்வித்துறையில் உள்ள அனைத்து ஆய்வு அலுவலர்களும், வகுப்பறை நிகழ்வுகளை உற்று நோக்கும் வகையிலும் 'தமிழ்நாடு வகுப்பறை நோக்கின் செயலி' ஒன்று உருவாக்கப்பட் டுள்ளது.*

_'அப்சர்வேசன் மொபைல் ஆப்'_ எனப்படும் இந்த செயலி ஆண்ட்ராய்டு மொபைல்களில் பயன்படுத்தும் வகையில் உள்ளது.

*📲இந்த ஆப் சென்னை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் பரிட்சார்த்த முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.*

*📲தமிழ்நாடு வகுப்பறை நோக்கின் செயலி மூலம் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள ஒவ்வொரு மாணவர்களின் கற்றல் விளைவு அடைவு நிலைகளை முறையாக கண்காணித்து முன்னேற்றம் அடையச்செய்ய எளிமையாக இருக்கும்.*

*📲கற்றலில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு தனிக்கவனம் செலுத்த முடிகிறது என சென்னை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஆய்வு நடத்திய அலுவலர்கள் தெரிவித்துள்ளார். இது ஆசிரியர்கள் அலுவலர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.*

*📲இந்நிலையில் சென்னை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள்     தொடர்ந்து அனைத்து மாவட்டங்களுக்கும் இந்த செயலியின் உபயோகத்தை உடனடியாக கொண்டு செல்ல ஒருங்கி ணைந்த பள்ளி கல்வியின் மாநில திட்ட இயக்ககம் முடிவு செய்துள்ளது.*

*📲இது தொடர்பாக சென்னை, திருவண்ணாமலை தவிர இதர 30 மாவட்டங்களுக்கு இந்த செயலியை பயன்படுத்தும் வகையில் அனைத்து அலுவலர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.*

*📲வட்டாரவளமைய அளவில் கணினி தொழில்நுட்பதில் நன்கு கற்றுத்தெரிந்த மொபைல் போன் நன்றாக பயன்படுத்துகின்ற ஒரு ஆசிரியர் பயிற்றுநர் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்டோருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள் ளது. இந்த பயிற்சி மாநில திட்ட இயக்ககத்தால் அளிக்கப்படுகிறது.*

*📲இதன் தொடர்ச்சியாக மாணவர்களின் வகுப்பறை செயல்பாடுகளை மொபைல் ஆப் மூலம் மாநிலம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் கண்காணிக்கும் பணிகள் விரைவில் தொடங்கும் என்று கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.*

🗝ayaneducationnews.blogspot.com

SoraTemplates

SoraTemplates


Sora Viral

Posted: 29 Feb 2020 09:53 AM PST

Free Version

  • Remove Footer Credits
  • One Time Payment
  • No Encrypted Scripts
  • Lifetime Premium Support
  • For Unlimited Domains
  • Lifetime Template Updates
  • Download Now
    Free Version

Premium Version

Description
Sora Viral Blogger Template is an indispensable news & magazine blogger blogspot template with a clean, modern design suitable for everyone who wants to share their stories about today's ever-changing technology, the latest breaking news or the hottest trending products with latest and unique day and night features.
Download Now
Documentation
Video Documentation
You can check this below video to understand the setup process much more easily, just click the below image to watch the video directly on YouTube, or click this link - How To Setup Sora Viral Blogger Template
Custom Template
We provide plenty of templates for free but if you want something unique for your blog then let us create a unique design for your blog, Just tell us your needs and we will convert your dream design into reality.
Contact Us Now
Created: 29 February 2020

*அரசு ஊழியர்கள் கண்டிப்பாக அடையாள அட்டை அணிய வேண்டும் - தமிழக அரசு திடீர் உத்தரவு*

*அரசு ஊழியர்கள் கண்டிப்பாக அடையாள அட்டை அணிய வேண்டும் - தமிழக அரசு திடீர் உத்தரவு*

🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟
⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡

*🎯அரசு ஊழியர்கள் கண்டிப்பாக புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அணிய வேண்டும், இல்லையென்றால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு திடீர் உத்தரவு பிறப்பித் துள்ளது.*

*🎯இதுகுறித்து பணியாளர் நிர் வாக சீர்திருத்தத்துறை செயலாளர் ஸ்வர்ணா நேற்று அனைத்து மாவட்ட கலெக்டர்கள், துணை செயலாளர்கள், துறை தலைவர்கள், மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள உயர் அதிகாரிகள், டிஎன்பிஎஸ்சி உயர் அதிகாரிகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.*

_அதில் கூறி இருப்பதாவது;_

*அரசு ஊழியர்கள் கண்டிப்பாக அடையாளஅட்டை அணிய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2018 ஜூலை 17ம் தேதி உத்தரவு பிறப்பித் துள்ளது.*

*🎯இதுதொடர்பாக பாக அடையாள அட்டை அணிய வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது. ஆனாலும் பலர் அடையாள அட்டை அணிவதில்லை என்று புகார் வந்துள்ளது.*

*🎯இது தவறான நடவடிக்கை யாகும். அதனால், அந்தந்த துறை தலைவர்கள் தங்கள் துறையின் கீழ் பணியாற்றும் அரசு ஊழியர்கள் பணியின்போது புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அணிவதை உறுதி செய்ய வேண்டும். அப்படி அணியாத வர்கள் மீது துறை தலைவர்கள் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.*

🗝ayaneducationnews.blogspot.com

*17(பி) ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டவர்கள் விவரம் கோரல் சார்ந்து தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்.*

*17(பி) ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டவர்கள் விவரம் கோரல் சார்ந்து தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்.*

🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟
⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡

*🎯தொடக்கக்கல்வி - பேரூராட்சி, நகராட்சி, அரசு துவக்க/ நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மீது தமிழ்நாடு குடிமைப்பணி (ஒழுங்கு முறைகள் மற்றும் மேல்முறையீடு) விதிகளில் விதி 17(பி) ன்படி ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டவர்கள் விவரம் கோரல் சார்ந்து தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்.*

*🎯இவ்வியக்க கட்டுப்பாட்டில் உள்ள ஊராட்சி / நகராட்சி / அரசு துவக்க/ நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களன் மீது தமிழ்நாடு குடிமைப்பணி (ஒழுங்கு முறைகள் மற்றும் மேல்முறையீடு) விதிகளில் விதி 17(பி)-ன்படி ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டவர்கள் பெயர், விபரம், விசாரணை அலுவலர் நியமனம் செய்யப்பட்ட விபரம், விசாரணை அறிக்கை பெறப்பட்ட விபரம் மற்றும் இறுதி ஆணை வழங்கப்பட்ட விபரங்களை அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.*

🗝ayaneducationnews.blogspot.com

Monday, 24 February 2020

*UDISE + Forms - செய்தி துளிகள் மற்றும் பதிவேற்றம் செய்யும் முறைகள் குறித்த காணொளி*

*UDISE + Forms - செய்தி துளிகள் மற்றும் பதிவேற்றம் செய்யும் முறைகள் குறித்த காணொளி*

🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟
⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡

*//அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கு வணக்கம்.//*

*📲EMIS School login வலைதளத்தில் udise + forms page open ஆகி உள்ளது.*

*📲எனவே 30 செப்டம்பர் 2019 உள்ளப்படி அனைத்து விவரங்களையும் உடனடியாக emis வலைதளத்தில் பதிவேற்றம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.*

*********************

*_HOW TO ENTER UDICE PLUS - STEP BY STEP VIDEO_*
👇👇👇👇👇👇👇👇
https://youtu.be/qD-B4ablGtA

🗝ayaneducationnews.blogspot.com