*🏆சிவகாமி கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை சார்பாக "BEST AWARD -2021" விருது வழங்கும் விழா - செய்தி துளிகள்*
*🏆கள்ளக்குறிச்சி மாவட்டம் சிவகாமி கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை சார்பாக "BEST AWARD -2021" விருது வழங்கும் விழா (10.01.2021) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் ஏ.கே.டி கல்வி நிறுவன ஆடிடோரியத்தில் நடைபெற்றது.*
*🏆தமிழகத்தில் பல மாவட்டங்களிலிருந்து சிறந்த ஆசிரியர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், கலைஞர்கள் மற்றும் மாணவச் செல்வங்கள் என மொத்தம் 100 க்கும் மேற்பட்டவர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு விருது வழங்கப்பட்டது.*
*🏆சிவகாமி அறக்கட்டளை நிறுவனத் தலைவர் _திரு.ஆ.கோபி_ அவர்கள் விழாவினை சிறப்பாக ஏற்பாடு செய்து வரவேற்புரை நிகழ்த்தினார்.*
*🏆கள்ளக்குறிச்சி மாவட்டக் கல்வி அலுவலர் _திருமதி.கா.கார்த்திகா_ அவர்கள் தலைமை ஏற்று சிறப்புரை நிகழ்த்தி விருதுகளை வழங்கினார்.*
*🏆சங்கராபுரம் வட்டாட்சியர் _திரு.ப.நடராஜன்_ அவர்களும், சங்கராபுரம் உதவி காவல் ஆய்வாளர் _திரு.ஆர்.திருமால்_ அவர்களும் முன்னிலை வகித்து சிறப்புரை நிகழ்த்தி விருதுகளை வழங்கினார்கள்.*
*🏆தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக இலக்கியத்துறை துறைத்தலைவர் _பேராசிரியர்.பெ.இளையாப்பிள்ளை_ அவர்கள் விழாவினை துவக்கி வைத்து சிறப்புரை நிகழ்த்தி விருதுகளை வழங்கினார்.*
*🏆கள்ளக்குறிச்சி மேனாள் மா.க.அலுவலர் _புலவர்.சிலம்பூர்க்கிழான்_ அவர்களும்*
*⚡கள்ளக்குறிச்சி கல்லைத் தமிழ்ச்சங்கம் _புலவர்.செ.மதிவாணன்_ அவர்களும்,*
*⚡கள்ளக்குறிச்சி TNSLF Society தலைவர் _திரு.சு.சுந்தரவடிவேல்_ அவர்களும்,*
*⚡சென்னை TNSLF Society பொதுச்செயலாளர் _திரு.மு.ஷேக்முகைதீன்_ அவர்களும்,*
*⚡சென்னை TNSLF Society து.செயலாளர் _திரு.மு.முத்துக்குமாரசாமி_ அவர்களும்,*
*⚡கள்ளக்குறிச்சி TNSLF Societly பொருளாளர் _திரு.நா.சுரேஷ்_ அவர்களும் வாழ்த்துரை வழங்கினார்கள்.*
*🏆கீழ்ப்பாடி அ.மே.நி.பள்ளி தமிழ் பட்டதாரி ஆசிரியர் _திரு.ப.சௌந்தரராஜன்_ அவர்கள் விழாவினை சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்தார்.*
*🏆திருமதி.உஷாராணி, திருமதி.இரா.கோ.கலைமகள் காயத்ரி, ஆகியோர் விழா தொகுப்பாளர்களாக சிறப்பாக பணியாற்றினார்கள்.*
*🏆சங்கராபுரம் கல்வியாளர் _திரு.ப.செந்தில்முருகன்_ நன்றியுரை வழங்கினார்.*
*******************************
💐🏆💐🏆💐🏆💐🏆💐🏆💐
*⚡இவ்விழாவினை சிறப்பாக ஏற்பாடு செய்த சிவகாமி அகாடமி நிறுவன தலைவர் _திரு.ஆ.கோபி_ அவர்களுக்கும்,*
*⚡விழாவினை தலைமையேற்று நிகழ்த்திய கள்ளக்குறிச்சி மாவட்டக் கல்வி அலுவலர் _திருமதி.கா.கார்த்திகா_ அவர்களுக்கும்,*
*⚡விழா சிறப்பு விருந்தினர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், தொகுப்பாளர்கள், விழா குழுவினர்கள் மற்றும் பத்திரிகை ஊடக நண்பர்கள் அனைவருக்கும்,*
*⚡விழா சிறப்பாக நடத்த இடம் வழங்கிய கள்ளக்குறிச்சி ஏ.கே.டி கல்வி நிறுவன நிறுவனர் அவர்களுக்கும்,*
*⚡விழா கதாநாயகர்களாக வீற்றிருந்து விருதுகளை பெற்றுக்கொண்ட அனைவருக்கும்,*
*⚡கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும்,*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
*_"AYAN EDUCATION NEWS"_* _AYAN SARAVANAN_ *சார்பாக நன்றி கலந்த வாழ்த்துகளையும், வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.*
www.ayaneducationnews.blogspot.com
💐🏆💐🏆💐🏆💐🏆💐🏆💐