AYAN EDUCATIONA NEWS

AYAN NEWS


Monday, 16 March 2020

*பள்ளிக்கல்வி-அனைத்து மாவட்டங்கள்- அனைத்துவகை பள்ளிகள் - 17.03.2020 முதல் 31.03.2020 வரை விடுமுறை அளித்தல் - ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் பணிகள் - சார்ந்த பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்*

*பள்ளிக்கல்வி-அனைத்து மாவட்டங்கள்- அனைத்துவகை பள்ளிகள் - 17.03.2020 முதல் 31.03.2020 வரை விடுமுறை அளித்தல் - ஆசிரியர்கள் மற்றும்  அலுவலகப் பணியாளர்கள் பணிகள் - சார்ந்த பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்*

🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟
⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡

*_பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் நக. எண் 014598/BC-2/ 2020, நாள்: 16.03.2020_*

*⚡தமிழகத்திலுள்ள அனைத்து வகைப் அரசு அரசு உதவி பெறும் மாநகராட்சி தனியார் பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு கொரோனா வைரஸ் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு 17.03.2020 முதல் 31.03.2020 வரை விடுமுறை அளிக்க அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது. அரசுத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் இத்தேர்வுகள் முடியும்வரை தேர்வு எழுதும் மாணவர்களுக்காக மட்டும் விடுதிகள் மற்றும் உறைவிடப் பள்ளிகள் தொடர்ந்து இயங்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. விடுதியில் தங்கிப் பயிலும் மாணவர்களுக்கு கொரானா வைரஸ் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு சுகாதாரமாக இருக்க அறிவுறுத்துமாறு மேலும் - மாணவர்கள் தங்கள் கைகளை உரிய கிருமிநாசினியை சோப்பு கொண்டு அவ்வப்போது தூய்மைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்துமாறு தெரிவிக்கப்பட்டது.*

*⚡மேலும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் நடப்பு கல்வி ஆண்டிற்குரிய தேர்வு பணிகள் மற்றும் 2020 2021 ஆம் கல்வி ஆண்டிற்குரிய TLM Preparation, Year Plan Preparation, Time Table Preparation, DIKSHA App மூலம் QR code ல் உள்ள பாட விவரங்களை சேகரித்தல், Activity, do your know-ல் தரப்பட்டுள்ள தகவலுக்குரிய விவரங்களை இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்து சேகரித்து வைத்தல், ஆங்கில பேச்சுப் பயிற்சி வகுப்பிற்குரிய மாதிரிகளை உருவாக்குதல், புதிய மாணவர் சேர்க்கைக்கான ஆயத்தப் பணிகள் போன்ற பணிகளை பள்ளிக்கு வருகைபுரிந்து மேற்கொள்ளும் வண்ணம் உரிய அறிவுரைகளை வழங்கிட அனைந்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்,*

*⚡மேலும், இது சார்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அனுப்புமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.*

_🎤பள்ளிக் கல்வி ஆணையர்_

🗝ayaneducationnews.blogspot.com

No comments:

Post a Comment