AYAN EDUCATIONA NEWS

AYAN NEWS


Friday, 3 January 2020

*தமிழகத்தில் அரையாண்டு விடுமுறை முடிந்து ஜனவரி 6 அன்று பள்ளிகள் திறக்கும் - பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்கள் உத்தரவு*

*தமிழகத்தில் அரையாண்டு விடுமுறை முடிந்து ஜனவரி 6 அன்று பள்ளிகள் திறக்கும் - பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்கள் உத்தரவு*

🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟
⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡

*🤷‍♂அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து நாளை (04.01.2020) பள்ளிகள் திறக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில் திங்கள்கிழமை (06.01.2020) பள்ளி திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.*

*🤷‍♂தமிழகத்தில் அரையாண்டு விடுமுறை 24.12.2019 முதல் 02.01.2020 வரை 10 நாட்கள் விடுமுறை விடப்பட்ட நிலையில் 03.01.2020 அன்று பள்ளிகள் திறக்கப்படும் என கூறப்பட்டிருந்தது.*

*🤷‍♂02.01.2020 அன்று உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டிருந்ததால் 03.01.2020 அன்று பள்ளி செல்ல கடினம் என கருதி ஆசிரியர்களின் கோரிக்கையினை ஏற்று 04.01.2020 அன்று பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டிருந்தது.*

*🤷‍♂இந்நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் பணி 02.01.2020 அன்று துவங்கி 03.01.2020 அன்று மாலை வரை பெரும்பாலான இடங்களில் நடைபெற்றது.*

*🤷‍♂ஓய்வின்றி இரண்டு நாட்களாக இரவு, பகலாக பணிபுரிந்து வரும் ஆசிரியர்களால் 04.01.2020 அன்று பள்ளி செல்வது  கடினம் என கருதி அரையாண்டு விடுமுறையினை நீட்டிப்பு செய்து (06.01.2020) திங்கட்கிழமை   பள்ளிகள் திறக்க பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

🗝ayaneducationnews.blogspot.com

No comments:

Post a Comment