*நெருப்பு வளைய சூரிய கிரகணமான விண்ணில் அதிசயத்தை பார்த்த வயதான மூதாட்டியும் இளம் மாணவர்களும்*
🌟⟦அ⟧ ⟦ய⟧ ⟦ன்⟧🌟
⚡⟬N⟭ ⟬E⟭ ⟬W⟭ ⟬S⟭⚡
*_பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி மாணவர்கள்_*
*🌔தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் நெருப்பு வளைய சூரிய கிரகணத்தை பார்த்ததுடன் தங்களை சுற்றியுள்ள பொது மக்களுக்கும் சூரிய கண்ணாடியை கொடுத்து பார்க்க வைத்தனர்.*
*🌓தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் கொடைக்கானல் அப்சர்வேட்டரி மூலம் பள்ளி மாணவர்களுக்கு தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி முன்னாள் முதல்வர் சந்திரமோகன் மற்றும் தலைமையாசிரியர் சொக்கலிங்கம் ஆகியோர் சூரிய கண்ணாடிகளை வழங்கினார்கள். சூரிய கண்ணாடி வழியாக எவ்வாறு நெருப்பு வளையத்தை பார்ப்பது என்கிற பயிற்சியும் பள்ளியில் வழங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இன்று விண்ணில் அதிசயம் நெருப்பு வளையம் சூரிய கிரகணத்தை பள்ளி மாணவர்கள் பார்த்ததுடன் தங்களை சுற்றியுள்ள பொதுமக்களுக்கும் அதனை கொடுத்து ஆர்வத்துடன் பார்க்க வைத்தார்கள். பள்ளி மாணவர்களுக்கு பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தார்கள். சூரிய கிரகணம் பார்த்ததில் மாணவர்கள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள். ஒரு அறிவியல் மாற்றம் காண ஏற்பாடு செய்த பள்ளிக்கு அனைத்து பொதுமக்களும் பாராட்டினார்கள்.*
*🌒தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் நடராஜபுரம் பகுதியில் சூரிய கண்ணாடி கொண்டு கிரகணத்தை பார்த்ததோடு சுற்றியுள்ள பொதுமக்களுக்கும் இதுதொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களையும் பார்க்க வைத்தார்கள். வயதான மூதாட்டியுடன் இளம் மாணவர்களும் சூரிய கிரகணத்தை பார்க்கும் காட்சியை காணலாம்.*
🗝ayaneducationnews.blogspot.com
No comments:
Post a Comment